வாடகை தாய் மூலம் விதிமுறைகளின் படிதான் குழந்தை பெற்றார்களா என விளக்கம் கேட்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் விதிமுறைகளின் படி குழந்தைகளை பெற்றார்களா? பொது சுகாதாரத்துறையின் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வாடகை தாய் மூலம் விதிமுறைகளின் படிதான் குழந்தை பெற்றார்களா என விளக்கம் கேட்கப்படும். கருமுட்டையை 21 முதல் 35 வயதுடையவர்கள் வழங்கலாம் என்றும் கூறினார்.

பா.ஜ., தலைவர்கள் ரகசியமாக சந்திக்கின்றனர்: அரவிந்த் கெஜ்ரிவால்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: பாஜ., தலைவர்கள் பலரும் என்னை ரகசியமாக சந்திக்கின்றனர். ஆட்சியில் உள்ள பாஜ.,வை எப்படியாவது வீழ்த்துங்கள் என என்னிடம் கேட்கின்றனர் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவர் தரம்பூரில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்த உற்சாகத்துடன் ஆம் ஆத்மி இருக்கிறது. பாஜ., தலைவர்கள் பலரும் என்னை ரகசியமாக … Read more

“விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே கேட்டையாவது அமையுங்க!" – கோரிக்கை முன்வைக்கும் வடபழஞ்சி மக்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகிலுள்ள ஊர் வடபழஞ்சி. இங்கு மதுரை-தேனி ரயில் நிறுத்தம் இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைத்த காலகட்டத்தில் இங்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் ரயில் தண்டவாளத்தின் கீழே பாலம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் பாறைகளாகவே இருந்ததால் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து வெடிகள் வைத்து பாறைகளை உடைக்க முயற்சி செய்திருக்கின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் இதன் அதிர்வால் சுவர்களில் விரிசல் … Read more

பணியிலிருந்து வீடு திரும்பும் சுவிஸ் நாட்டவர்கள் ஆற்றில் செய்யும் செயல்: அதிர்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகள்…

சுவிஸ் நகரம் ஒன்றிற்கு சுற்றுலா சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள், அந்நகர மக்கள் செய்த ஒரு செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடைகளைக் களைந்து பை ஒன்றிற்குள் வைத்துக்கொண்டு ஆற்றிற்குள் குதித்துள்ளார்கள் அவர்கள். அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சுவிட்சர்லாந்தின் Basel நகரில்தான் அந்த விடயம் நடக்கிறது. சுற்றுலாப்பயணியாகிய Alexa என்பவர், Basel நகரில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவோர், தங்கள் அலுவலக உடைகளைக் களைந்து ஒரு மீன் வடிவ பைக்குள் வைத்துவிட்டு, Rhine ஆற்றுக்குள் குதிப்பதைக் கண்டுள்ளார். Picture: TikTok/alexas_adventures … Read more

தீபாவளி பண்டிகைக்கு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 8ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில்,  16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் இன்று தெரிவித்து உள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார். தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்புறங்களில் வசிப்பவர்கள், பணி செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் … Read more

உக்ரைன் தலைநகர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. பல இடங்களில் குண்டுகள் தாக்கியுள்ள நிலையில் கீவ் நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.

`கிடா வெட்டு, கறி சோறு' – ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அம்மன் கோயில் திருவிழா!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். கோயில் திருவிழா என்றாலே பெண்களின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும். அதுவும் அம்மன் கோயில் என்றால் சொல்லவா வேண்டும்! பொங்கல் வைப்பது, முளைப்பாரி எடுப்பது என அமர்க்களப்படுத்துவார்கள். ஆனால் முதல்நாடு கிராமத்தில், கண்மாய்க் கரையில் அமைந்துள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயில் (எல்லைப்பிடாரி அம்மன் பீடம்) திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்! ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் இந்தக் கோயிலில் விழா எடுப்பார்கள். அப்போது ஆண்கள் அனைவரும் கோயிலில் ஒன்று கூடி … Read more

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மேலும் வீழ்ச்சி…

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், உள்நாட்டு பங்குகளின் எதிா்மறையான போக்கு போன்ற காரணங்களால் முதலீட்டாளா் களின் ஆா்வம் வெள்ளிக்கிழமை குறைந்துபோனது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை 82.19-இல் தொடங்கியது. அது, அதிகபட்சமாக 82.43 வரை கீழிறங்கி 82.32-இல் நிலைபெற்றது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று,  … Read more

பக்கத்தில் இருப்பவை சடலங்கள் என்பது தெரியாமல் கட்டிப்பிடித்து உறங்கிய குழந்தை: தாய்லாந்து கொடூரத்தில் தப்பிய பிஞ்சு உயிர்…

தன் பக்கத்தில் படுத்திருக்கும் தன் தோழிகள் கொல்லப்பட்டுவிட்டது தெரியாமல் அவர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்கியிருக்கிறாள் ஒரு சின்னஞ்சிறு குழந்தை. தாய்லாந்தில் 23 குழந்தைகள் உட்பட 36 பேர் முன்னாள் பொலிசார் ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆச்சரியவிதமாக ஒரு குழந்தை தப்பியிருக்கிறாள். கடந்த வியாழக்கிழமை, அதாவது அக்டோபர் மாதம் 6ஆம் திகதி, தாய்லாந்தில் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. Panya Khamrab (34) என்னும் முன்னாள் பொலிசார் ஒருவர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும், வாகனம் ஒன்றைக் … Read more

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.