மளமளவென சரியும் மக்கள் தொகை.. குழப்பத்தில் 20 நாடுகள்..!

உலகில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என்பதுதான் மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து வந்தாலும் ஒரு சில நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் உள்ள 20 நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைந்து வருவதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மக்கள் தொகை குறைந்து வரும் … Read more

`அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன்!' – ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்

23 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அமெரிக்காவின் சிறந்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், தான் இறங்கிய பல களங்களில் வெற்றிவாகை சூடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். செரினா இந்நிலையில், செரினா வில்லியம்ஸ் தான் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை ஆகஸ்ட் 9-ம் அறிவித்துள்ளார். செரினாவின் இந்த அறிவிப்பை ‘வோக் (Vogue)’ செப்டம்பர் இதழ் வெளியிட்டுள்ளது. 40 வயதாகும் டென்னிஸ் நட்சத்திரமா செரினா விளையாட்டில் இருந்து ஓய்வு பெற … Read more

வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ அழைப்பில் பேசிவிட்டு தற்கொலை செய்த இளம்பெண்!

* செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஞான பாக்கியபாய். * வீடியோ அழைப்பில் பேசும் போது கணவருடன் சண்டை ஏற்பட்டதால், ஞான பாக்கியபாய் எடுத்த விபரீத முடிவு வெளிநாட்டில் உள்ள கணவருடன் வீடியோ அழைப்பில் பேசும்போது ஏற்பட்ட சண்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஞான பாக்கியபாய் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரிப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டைவிட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. ரூ.2.23 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பெரும்பாலும் வங்கி டெபாசிட்களாக உள்ளன.

1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகள் பறிமுதல்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல்

சென்னை: 1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசிலாமணி என்ற ஸ்தபாதிக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரசு தேர்வில் வெற்றி பெற்று தாய், மகன் அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மலப்புரம்: கேரளாவில் தாயும், மகனும் அரசு பணியாளர் தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து (42 ), இவரது மகன் விவேக் (24). பிந்து கடந்த 10 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். விவேக் கல்லூரி படிப்பு முடித்ததும், தாயும், மகனும் சேர்ந்து அரசு தேர்வுகள் எழுத விரும்பியுள்ளனர். இதனையடுத்து இருவரும் … Read more

டிவிட்டர் கொடுத்த நெருக்கடி.. ‘வேறு வழியில்லை’ எலான் மஸ்க் புலம்பல்..!

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் சிஇஓ எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்த நிலையில் பல பிரச்சனைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் முடக்கப்பட்டது. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ள வேளையில் எலான் மஸ்க் என்ன செய்வது எனத் தெரியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் மீண்டும் மிகப்பெரிய தொகைக்கு டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார். மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..! … Read more

இன்ஸ்டாவில் பிகினி படம்… பேராசிரியையிடம் ரூ.99 கோடி கேட்கும் பல்கலைக்கழகம் – நடந்தது என்ன?

கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியையாக பணியாற்றிய வந்தார். இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேராசிரியையின் புகைப்படங்களை பார்த்தனர். அதுவும் பேராசிரியை பிகினி உடையில் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இதனை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருந்த போது மாணவரின் பெற்றோர் அதனை பார்த்துவிட்டனர். பேராசிரியை பிகினி உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது குறித்து அம்மாணவரின் பெற்றோர் … Read more

மிரட்டும் சீனா! அடிபணிகிறதா தைவான்? வெளியான முக்கிய தகவல்

சீனாவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தைவான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, நான்சி வந்து சென்ற மறுநாளில் இருந்து, தென் சீன கடலில், தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை துவக்கியது. இந்நிலையில், தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ நேற்று கூறுகையில், தைவான் ஜலசந்தியில், போர் பயிற்சி என்ற பெயரில் … Read more

தேசிய கொடி வாங்கினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் : ஹரியானா அலம்பல்… வீடியோ

ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகளில் ரேஷன் பொருள் வாங்க செல்லும் மக்களிடம் ரூ. 20 கொடுத்து தேசிய கொடி வாங்கினால் தான் பொருள் வழங்கப்படும் என்று அங்குள்ள கடை ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அன்றாடம் ஒருவேலை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் ரேஷனில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டினியை போக்கிவரும் தினக்கூலிகள் பலரும் இந்த … Read more