பத்ரா சால் முறைகேடு வழக்கு: சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 5-ந் தேதி வரை நீட்டிப்பு

மும்பை, மும்பையில் ‘பத்ரா சால்’ என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ந் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். முதலில் அமலாக்கத்துறை … Read more

டாடா முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ஓரே நாளில் 7 சதவீதம் சரிவு..!

டாடா குழுமத்தின் முக்கிய ரீடைல் விற்பனை நிறுவனமான டிரெண்ட் லிமிடெட் பங்குகள் திங்களன்று யாரும் எதிர்பார்க்காத வரையில் சுமார் 7 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்றைய வர்த்தகத்தில் டிரெண்ட் பங்குகள் 1,299.55 ரூபாய் என்ற இன்ட்ராடே குறைந்தபட்ச அளவீட்டை எட்டியது. வாரத்தின் முதல் நாள் வர்த்தக முடிவில் டிரெண்ட் பங்குகள் 6 சதவீதம் குறைந்து 1,313.85 ரூபாய் அளவில் முடிந்தது. டிரெண்ட் பங்குகள் மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்தச் … Read more

`கேட்டைத் திறக்க இவ்வளவு நேரமா…' – குடியிருப்புக் காவலர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய பெண் கைது

டெல்லி அருகே கவுதம புத்த நகரில் தனது குடியிருப்புக் காவலாளிகளுடன் தகராறு செய்த பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில் நொய்டாவின் செக்டார் 126-ல் உள்ள ஜே.பி.விஷ்டவுன் சொசைட்டி எனும் குடியிருப்புப் பகுதியில் பவ்யா ராய் என்ற பெண் வசித்துவருகிறார். நேற்று அவர் தன் குடியிருப்பிலிருந்து வெளியேறும்போது காவலாளி கதவைத் திறக்க தாமதித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பவ்யா ராய், அந்த இடத்திலேயே அநாகரிகமான சைகைகள் காட்டித் திட்டியும், காவலாளிகளில் ஒருவரை மிரட்டித் தாக்கியுமிருக்கிறார். Woman abuse … Read more

கடலில் மூழ்கி கிடக்கும் பயணிகள் விமானம்! கூகுள் மேப்ஸ் பயனர்களை குழப்பிய புகைப்படம்

அவுஸ்திரேலிய அருகே கடலில் பயணிகள் விமானம் ஒன்று மூழ்கி கிடப்பதாக புகைப்படத்தை பார்த்த கூகுள் மேப்ஸ் பயனர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதேபோன்ற சம்பவம் 2016-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் நடந்தது. அவுஸ்திரேலியாவில் கீழே விழுந்த பயணிகள் விமானம் போன்ற புகைப்படம் ஒன்று கூகுள் மேப்ஸ் பயனர்களைக் குழப்பியுள்ளது. இது முதலில் ஒரு பயனரால் கண்டறியப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது, அதன் பிறகு அது வைரலாக தொடங்கியது. அந்தப் படத்தில், குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கார்டுவெல் … Read more

இந்தியா பக்கம் திரும்பும் தைவான்.. கடுப்பான சீனா..?!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போன்று தைவான் குட்டி நாடாக இருந்தாலும் அதிகச் சக்தி வாய்ந்தாக உள்ளது, ஆயுத பலத்தில் இல்லை தொழில்நுட்ப பலத்தில். ஏன் சீனாவே பல நாட்களாகத் தைவான் நாட்டைக் கைப்பற்ற அந்நாட்டு எல்லையில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் எவ்விதமான தாக்குதல்களையும் இதுவரையில் நடத்தவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்தி துறையும் தைவான் நாட்டை நம்பிதான் உள்ளது. அந்த அளவில் தொழில்நுட்பத்தில் குறிப்பாகச் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் முன்னோடியாக … Read more

23.08.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | August – 23 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

அக்டோபர் மாதத்தில் எரிசக்தி கட்டணம் எவ்வளவு அதிகரிக்கும்? பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாகும் தகவல்

விலைவாசி உயர்வால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது எரிசக்தி கட்டண உயர்வும் பேரிடி கொரோனா ஊரங்கில் இருந்து நாடுகள் மீண்டு வர எரிவாயு தேவை அதிகரித்து விலை உச்சவரம்பும் அதிகரிப்பு பிரித்தானியாவில் சரிசக்தி கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் நிலையில், அக்டோபரில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் 3,553.75 பவுண்டுகள் என்ற விலை வரம்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, மேலும் கட்டணங்கள் … Read more

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் பல சிக்கல்கள் உள்ளது.: ஐகோர்ட்டில் டாஸ்மாக் விளக்கம்

சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது என டாஸ்மாக் தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏழு, எட்டு கடைகள் மட்டுமே இருப்பதால் திட்டத்தை அமல்படுத்துவது எளிது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் விளக்கம் அளித்த நிலையில் விசாரணையை சென்னை ஐகோர்ட் செப்.16-க்கு ஒத்திவைத்துள்ளது.

3000 பணி நீக்கமா.. ஃபோர்டின் அதிரடி முடிவு.. இந்தியர்கள் எத்தனை பேர்

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் 3,000 சம்பளதாரர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் இந்த பணி நீக்க நடவடிக்கையானது வட அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாகனத் தொழிலை மின்சார துறைக்கு மாற்ற திட்டமிடும் போர்டு நிறுவனம், பல மறு சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மின்சார வாகன துறைக்கு நிறுவனம் மாறுவதால், அதன் பணியாளர்கள் அதற்கான திறனைக் கொண்டிருக் வில்லை என்று பல மாதங்களாகவே … Read more

தூத்துக்குடி: ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை – முன் விரோதம் காரணமா?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வந்தார். இவர் இன்று பஞ்சாயத்து அலுவலகம் சென்றுவிட்டு, பிற்பகலில் தெற்கு திட்டங்குளம் டு விஜயாபுரி சாலையில் உள்ள தனது தோட்டத்துக்குச் சென்றார். அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் பொன்ராஜை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியது. இதற்கிடையே, தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக், வசந்த் ஆகிய 2 பேரைப் பிடித்து கோவில்பட்டி … Read more