மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சித்து வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். கோயம்பேட்டில் தஞ்சை பாரம்பரிய கைவினை கலை பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தபின், அதனை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 

அடடா.. சீனாவிலும் இந்த நிலைமையா.. ''வறட்சி, காட்டுத்தீ, வறண்ட ஆறுகள்''.. வெப்ப அலையுடன் போராட்டம்

International oi-Mani Singh S பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் சில மாகாணங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளதால், அங்கு பயிர்களும் கருகும் சூழல் ஏற்பட்டதால் சிறப்பு குழுவை சீன அரசு அமைத்துள்ளது. Recommended Video சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தின் யாங்சே டெல்டா பகுதிகளில் ஒருவாரத்திற்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவுகிறது. பருவ நிலை மாறுபாடே இத்தகைய வெப்ப நிலைக்கு காரணம் என்று குறைகூறும் சீன அதிகாரிகள், … Read more

ஊழலுக்கு ‛‛ஆம், ஆம் சொல்லும் ஆம் ஆத்மி: மத்திய அமைச்சர் விளாசல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் நடந்து வரும் ஆம்ஆத்மி அரசு, ஊழலுக்கு துணை போகும் அரசாக உள்ளது. என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக சாடினார். மதுபான கடை , விற்பனை உரிமம் உள்ளிட்ட மது பார் நடத்தும் லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ., இன்று தனது ரெய்டை துவக்கி உள்ளனர். இதில் துணை முதல்வர் மணீஷ் … Read more

“பாராட்டும் அமெரிக்க நாளிதழ்… சிபிஐ-யை அனுப்பும் மத்திய அரசு!" – ரெய்டு குறித்து கெஜ்ரிவால்

டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்குள்ளாகி கைதாகியிருக்கும் நிலையில், இன்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். முன்னதாக 2021-2022-ம் ஆண்டுக்கான டெல்லி மாநில கலால் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்துமாறு, டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக 11 கலால்துறை அதிகாரிகளை, … Read more

சுவிஸ் மாகாணம் ஒன்றில் மக்களுக்கு அனுப்பப்படும் மர்ம மின்னஞ்சல்: பொலிசார் எச்சரிக்கை…

சுவிஸ் மாகாணம் ஒன்றில் மக்களுக்கு பொலிசார் அனுப்பியதாக கூறப்படும் மர்ம மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதை தாங்கள் அனுப்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள மக்கள் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் சிறார் பாலியல் புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தாங்கள் … Read more

கட்டண உயர்வு குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேசுவோம்! அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் சிவசங்கர், வரும் காலத்தில் கட்டண உயர்வு ஏற்படாதவாறு, ஆம்மின பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்ய  தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறி உள்ளார். சமீப காலமாக விடுமுறை தினங்களில் இயக்கப்படும் ஆம்மின பேருந்துகளில்  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அரசு … Read more

டெண்டர்களில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளது: ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் பதில்

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என அறப்போர் இயக்கம் ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அளித்த புகாரை வலைதளங்களில் வெளியிட்டது அவதூறு இல்லை என தெரிவித்தது.   

நரிகுறவர் பெண்ணுக்கு கடனுதவி! உண்மை நிலவரம் என்ன தெரியுமா? நடந்ததை விவரிக்கும் மாவட்ட ஆட்சியர்!

Tamilnadu oi-Arsath Kan செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், அஸ்வினி சேகர் என்ற நரிகுறவர் பெண்ணுக்கு முதலமைச்சர் வழங்கிய கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அஸ்வினி சேகர் என்ற அந்த நரிகுறவர் பெண்ணே இது தொடர்பாக பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். அது தொடர்பான … Read more

தமிழ்நாட்டுக்கு மத்திய மின்சார துறை போட்ட தடை.. நிலுவை தொகை எவ்வளவு தெரியுமா..?

மத்திய மின் அமைச்சகம் மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கியைச் செலுத்தாததற்காக 13 மாநிலங்களுக்கு ஸ்பாட் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கவோ விற்கவோ வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. மின் அமைச்சகத்தின் ஒரு அமைப்பான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (POSOCO) முதல் முறையாக மின்சாரம் விதிகளை 2022 ஐ பயன்படுத்தி டிஸ்காம்களைத் மாற்று குறுகிய கால ஆதாரங்களில் இருந்து தடுக்க உத்தரவிட்டு உள்ளது. மின்சாரம் விதிகள் 2022 என்பது தாமதமாகச் செலுத்தும் சர்சார்ஜ் மற்றும் அதைத் தொடர்புடைய … Read more

செஸ் ஒலிம்பியாட் செலவுகள்: ஜெயகுமார் VS மெய்யநாதன்!

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜுலை மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெறாது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்காரணமாக, செஸ் போட்டியை நடத்தும் உரிமையை தமிழ்நாடு அரசு பெற்றது. அதன்படி, போட்டியைச் சிறப்பாக நடத்த ரூ.100 கோடி அரசு சார்பாக ஒதுக்கப்பட்டது. செஸ் போட்டி தொடக்க விழாவில்… அதன்படி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது … Read more