நாமக்கல்: கார் கதவை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை! – பட்டப்பகலில் மர்மக் கும்பல் துணிகரம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது: 49). இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில், தனது கணக்கிலிருந்து, சொந்த அவசரத் தேவைக்காக ரூ.8 லட்சத்தை எடுத்துள்ளார். தொடர்ந்து, நிதி நிறுவனத்துக்குச் சென்ற அவர், அங்கு சீட்டுப்பணம், ரூ.12 லட்சத்தையும் எடுத்துள்ளார். மொத்தமாக, ரூ.20 லட்சத்தை, தனது காரில் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்துள்ளார். பரமத்தி வேலூர் அப்போது, தனது மகன் ஹரிஹரனை, பணத்தை எடுத்துக்கொண்டு, … Read more

பாதிப்பு 35000ஐ கடந்தது; உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை!

ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை  35,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துஉள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்றே இன்னும் முழுமையாக விலகாத நிலையில்,. புதிய தொற்று நோயாக குரங்கம்மை பரவி வருகிறது. இந்த நோய் தீவிரமாக பரவத்தொடங்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்து உள்ளது. தற்போது வரை 92 நாடுகளில் … Read more

துபாய் லொட்டரியில் ரூ.10 கோடி பரிசு வென்ற இந்தியர்!

துபாயில் வேலை செய்துவரும் இந்தியருக்கு லொட்டரியில் ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது. முதல்முறையாக துபாயின் மஹ்சூஸ் லொட்டரி வரலாற்றில் ஒரே எண்ணில் இரண்டு பேருக்கு பரிசு விழுந்துள்ளது. இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் வெளிநாட்டவர்கள் இருவர் ரூ.21 கோடிக்கு மேல் பரிசு விழுந்த லொட்டரியை பகிர்ந்து கொள்கின்றனர். துபாயில் சனிக்கிழமை 88-வது வாராந்திர டிராவில், இரண்டு வெற்றியாளர்கள் – ஒரு இந்தியர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் முதல் பரிசான 10 மில்லியன் திர்ஹாம்கள்(ரூ. 21,68,13,056) வென்றனர். அதாவது ஒவ்வொருவரும் … Read more

சென்னை தினத்தையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை தினத்தையொட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி 6 மணி வரை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 7-வது நிழற்சாலையில் இருந்து 6-வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 3-வது மெயின் ரோட்டில் இருந்து 6-வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா கவலைக்கிடம்| Dinamalar

புதுடில்லி: பிரபல ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 59, குணச்சித்திர நடிகராகவும், டி.வி.க்களிலும் நடித்துள்ளார்.கடந்த 10 ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போத மாரடைப்பு ஏற்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஏறத்தாழ மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், சுயநினைவு இன்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுடில்லி: பிரபல ஹிந்தி … Read more

Nirmala Sitharaman-க்கு 63வது பிறந்தநாள்.. மதுரை டூ லண்டன்.. வர்த்தக துறை டூ நிதி துறை..!

63வது பிறந்தநாள் நாள் கொண்டாடும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி முதல் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம். ஆனால் டிவிட்டரில் இன்று காலை முதல் மத்திய நிதியமைச்சர் பெயர் டிரெண்ட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் டிரெண்டாகி வருகிறது. அனில் அம்பானி-க்கு 2 வருடத்திற்கு பின் விடிவுகாலம்.. கைகொடுத்த முகேஷ் அம்பானி..! நிர்மலா சீதாராமன் … Read more

மாணவர்கள் மத்தியில் மாணவிகள் குறித்து ஆபாசப் பேச்சு? – கல்லூரி முதல்வர்மீது வழக்கு பதிவு

மும்பை, தோபி தலாவ் பகுதியிலுள்ள மகாராஷ்டிரா செகண்டரி பயிற்சிக் கல்லூரியின் (ஆசிரியர் பயிற்சி) முதல்வராக இருப்பவர் டாக்டர் ஊர்மிளா பார்லிகர். இவர் மாணவ, மாணவிகள் ஒன்றாக இருந்தபோது மாணவிகளின் உடல் உறுப்புகள் குறித்து ஆபாசமாகப் பேசியிருக்கிறார். அதோடு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிவாசி சமுதாய மாணவர்களை ஊர்மிளா மிகவும் இழிவாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆபாசமாகப் பேசி துன்புறுத்தல் கல்லூரி நிகழ்ச்சிகளில் தன் முன் நிற்கும் வரிசையில் உள்ள மாணவர்களில் யாராவது … Read more

‘அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன’! முதல்வர் உதவி வழங்கிய நரிக்குறவப் பெண் அஸ்வினி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அரசின்  அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன. அரசு கொடுத்த கடன் பல மாதங்களாகியும் இன்னும் வந்து சேரவில்லை, முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றும், அமைச்சர் சேகர்பாபுடன் சேர்ந்து உணவருந்தியும் வரவேற்பை பெற்ற  நரிக்குறவப் பெண் அஸ்வினி, தமிழகஅரசு மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். கடந்த வருடம்  கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தின்போது, கோவில் நிர்வாகிகளால் விரயட்டிக்கப்பட்டவர்,  நரிக்குறவப் பெண் அஸ்வினி. மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர். இவர் தான் விரட்டியடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. அதில்,  அரசாங்கம்தானே … Read more

திருப்பத்தூர் மாவட்டம் அருகே வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீடு இடிந்து விழுந்து  சுரேந்தர் என்பவரின் 3 வயது மகளான வர்ஷினி உயிரிழந்தார். படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வர்ஷினி உயிரிழந்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் புகார் சொல்பவர் தூண்டும் ஆடை அணிந்திருந்தால் வழக்கு நிற்காது: கேரள நீதிமன்றம்

India bbc-BBC Tamil Getty Images பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு உள்ளான எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கிய கேரளாவின் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்றம், புகார் தரும் பெண் “பாலியல்ரீதியாகத் தூண்டும்” ஆடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354(ஏ) (பாலியல் துன்புறுத்தல்)-இன் கீழ் குற்றச்சாட்டை முதன்மையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், “இந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் … Read more