மக்கள் நல திட்டங்களை இலவசம் என்று கொச்சைப்படுத்திய செய்தியாளரை விளாசிய நிதி அமைச்சர் பிடிஆர்

சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி இலவசம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் இனி இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும் பேசியிருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவே இவ்வாறு கூறியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தியா டுடே தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம், ஏழ்மை நிலையை விரட்ட … Read more

பூஞ்சேரி கிராமத்தில் இதுவரை ரூ.1.5 கோடி செலவில் நலத்திட்டங்கள்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம்

செங்கல்பட்டு: அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார். அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால் தாமதம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மபி பாஜக அலுவலகத்தில் தரையில் கிடந்த தேசியக்கொடி..வெடித்த சர்ச்சை.. பத்திரிகையாளருக்கு மிரட்டல்

India oi-Nantha Kumar R போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி தரையில் கிடந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் தேசியக்கொடிக்கு பாஜக அவமரியாதை செய்தததாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ள நிலையில் வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சராக உள்ளார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது. … Read more

விப்ரோ ஊழியர்களின் சம்பளம் கட்.. திடீர் நடவடிக்கை எதற்காக..?!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் ஒன்றான விப்ரோ அதன் நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே நிறுத்த முடிவு செய்துள்ளது. பேரியபிள் பே என்பது ஒரு ஊழியரின் சம்பளத்தில் கணிசமான பகுதியை அந்த ஊழியரின் செயல் திறன் அடிப்படையில் அளிக்கப்படும் தொகை. இந்தியாவின் புதிய ‘EMS HUB’ ஆக மாறும் தமிழ்நாடு.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்..! வேரியபிள் பே இது மொத்த சம்பளத்தில் ஒரு பகுதி என்பதால் வேரியபிள் பே குறையும் போது … Read more

“நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை… என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா" – மணிகண்ட பூபதி பேட்டி

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு சமீபத்தில் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி, ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்றும் வலதுசாரி நிறுவனத்தில் இணை நிறுவனராக பணிபுரிந்தவர் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவரது நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பின்புலத்தை ஆராய ஆரம்பித்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை. இந்த விமர்சனங்கள் குறித்து மணிகண்ட பூபதியை தொடர்புகொண்டு பேசினோம். விகடனுக்காக முதன்முறையாக மனம் திறந்தார். மணிகண்ட பூபதி “முதலில் என்மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் … Read more

அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைக்கலாமே! உயர்நீதி மன்றம் பரிந்துரை

மதுரை: அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைப்பது தொடர்பாக தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக  சுற்றறிக்கை அனுப்ப  பரிந்துரை செய்துள்ளது. தேனியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்,தன்னை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து தேனி அரசு கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக … Read more

மாநகராட்சி கடைகளுக்கு வாடகை நிலுவையை செலுத்த அவகாசம் தரப்படாது: அமைச்சர் கே.என்.நேரு

வேலூர்; மாநகராட்சி கடைகளுக்கு வாடகை நிலுவையை செலுத்த அவகாசம் தரப்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை நிலுவையை கட்டாயம் செலுத்த வேண்டும் எனவும் வாணியம்பாடி புதிய பேருந்து நிலையம் நகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்படும் என வேலூரில் அமைச்சர் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?

India bbc-BBC Tamil Getty Images கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் … Read more

இந்தியாவின் புதிய ‘EMS HUB’ ஆக மாறும் தமிழ்நாடு.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!

சீனா-வின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான பணப் பலத்தை மிகவும் குறைந்த காலகட்டத்தில் உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தி துறை தான். அதிலும் முக்கியமாக இன்றைய வாழ்க்கை முறையில் மக்களின் தினசரி வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மலிவான விலையில் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு தான் சீனாவின் வேகமான வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. இந்த நிலையில் இந்தியாவில் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் முக்கிய உற்பத்தி தளமாக மாறி வருகிறது … Read more