முகேஷ் அம்பானி-க்கு பயம் காட்டும் டிமார்ட் ராதாகிஷன் தமனி..!

இந்திய ரீடைல் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பெரும் நிறுவனங்கள் மத்தியில் போட்டியும் அதிகரித்துள்ளது. ஒருபக்கம் மெட்ரோ நிறுவனத்தையும் அதன் கிளைகளையும் வாங்க இந்திய நிறுவனங்கள் உடன் வெளிநாட்டு நிறுவனங்களும் போட்டிப்போட்டு வரும் நிலையில், மறுமுனையில் நாட்டின் முன்னணி ரீடைல் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் முகேஷ் அம்பானி-யின் ரீடைல் வர்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் உடன் போட்டிப்போட யாரும் இல்லை என நினைத்திருந்த வேளையில் … Read more

மயிலாடுதுறை: வன்னியர் சங்க முன்னாள் நகரச் செயலாளர் கொலை; பதற்றம் – போலீஸார் குவிப்பு

மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் கண்ணன் (வயது 31). ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவர் மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவருக்கும் கலைஞர் காலனியைச்  சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்தாண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் சாப்பிட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன், கதிரவனைத்  தாக்கியுள்ளார். முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளர் கொலை இது குறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்ணனை … Read more

பிரித்தானிய பிரதமர் தேர்தல்: நழுவும் பிரதமர் வாய்ப்பு… பெரும் பின்னடைவை சந்தித்துள்ள வேட்பாளர்

பிரதமருக்கான போட்டியில் ரிஷிக்கு பின்னடைவு. 32 புள்ளிகள் வித்தியாசத்தில் லிஸ் ட்ரஸ் முன்னணி.   பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக். கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ், ரிஷியைவிட 32 புள்ளிகள் முன்னணி வகிக்கிறார். சமீபத்தில் 961 கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 60 சதவிகிதம் பேர் லிஸ் ட்ரஸ்ஸை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்கள். ரிஷிக்கோ, வெறும் 28 சதவிகிதம் பேரின் ஆதரவுதான் கிடைத்துள்ளது. … Read more

ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆடர்லி முறை ஒழிப்பில் அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சீனா நிறுவனத்துக்கு பெருத்த அடி.. அடுத்தடுத்து சரியும் சீன சாம்ராஜ்ஜியங்கள்!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் சமீபத்திய காலாண்டுகளாகவே, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சீன நிறுவனங்கள் ஒவ்வொன்றாக சரியத் தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் சீனாவின் மாபெரும் நம்பிக்கையாக இருந்து வந்த எவர்கிராண்டே தொடங்கி, பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முடங்கியுள்ளது. இதற்கிடையில் சீனாவின் பல முக்கிய வங்கிகளும் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதற்கிடையில் சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் கூட சரிவின் விளிம்பில் இருப்பதாகவும், அரசின் உதவியினை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மீண்டும் … Read more

கரூர்: காவல்நிலையத்தில் இருந்தே தப்பியோடிய பிக்பாக்கெட் திருடன் – சுற்றி வளைத்த போலீஸார்!

கரூர் அருகே உள்ள புலியூர் வடக்குப்பாளையம் கிராமத்தில், பிரபல பிக்பாக்கெட் திருடனான கொடியரசு, தனது கைவரிசையை காட்ட முற்பட்டுள்ளான். இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து, கட்டி வைத்துள்ளனர். அதோடு, பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவலும் கொடுத்துள்ளனர். இந்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்ததோடு, நள்ளிரவில் கொடியரசை அழைத்து வந்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர். தொடர்ந்து காலையில் காவல் நிலையத்தில் … Read more

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நீதிபதி சந்துரு குழு அரசிடம் அறிக்கை அளித்த நிலையில், உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு – பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

India oi-Mathivanan Maran ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு. 2 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், … Read more

பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,608 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,42,98,864 ஆனது. கோவிட்டிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,36,54,064 ஆனது. கோவிட் பாதித்த 72 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,27,206 ஆனது. தற்போது 1,01,343 பேர் … Read more

14 ஆண்டுகளுக்கு பின் விலை உயரும் நூடுல்ஸ்… இந்த ஒரே ஒரு காரணம் தான்!

தாய்லாந்து நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது நூடுல்ஸ் விலையை உயர்த்தி கொள்ள அனுமதிக்க வேண்டும் என தாய்லாந்து அரசிடம் நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாய்லாந்து நாட்டை பொருத்தவரை நூடுல்ஸ் என்பது பெரும்பாலான மக்கள் சாப்பிடும் உணவு என்பதால் அந்த உணவின் விலை ஏற்றத்தை அரசாங்கத்தின் அனுமதி கொண்டே ஏற்ற வேண்டும். எனவே 14 ஆண்டுகளாக நூடுல்ஸ் விலை உயராமல் இருக்கும் நிலையில் தற்போது தயாரிப்புக்கு அதிக செலவு … Read more