6 வயது சிறுமியிடம் அத்துமீறல்! தமிழ் நகைச்சுவை நடிகர் கைது

வடிவேலுவின் எலி படத்தில் துணை நடிகராக நடித்தவர் ராஜு சிறுமியிடம் அத்துமீறலால் போக்சோ சட்டத்தின் கீழ் எலி ராஜு கைது சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நகைச்சுவை நடிகர் எலி ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. நடிகர் வடிவேலுவின் எலி படத்தில் துணை நடிகராக நடித்த இவர், மேலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இவரது வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் … Read more

கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடத்த காவல்துறை அனுமதி தேவையில்லை! உயர்நீதி மன்றம்…

மதுரை: கிராமப்புறங்களில் கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை  என்று கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள்,  ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால்தான், காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்  என தெரிவித்து உள்ளது. கோயில் திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீஸ் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து ,ரூ.38,840-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்து, ரூ.38,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59 குறைந்து, ரூ.4,855-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.40 குறைந்து, ரூ.63.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் சுதந்திர தின விழாரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை முதல்வர் ரங்கசாமி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் சுதந்திர தினவிழா நடைபெற்றது.அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் ரங்கசாமி காலை 9.13 மணிக்கு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.தேசியகீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று காவலர்களின் … Read more

இறப்பை முன்பே கணித்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. சொத்துக்களை என்ன செய்துள்ளார் தெரியுமா..?

இந்தியாவின் பணக்கார பங்கு முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஞாயிற்றுக்கிழமை மறைந்தார், அவரைப் பின்பற்றிப் பங்குச்சந்தை முதலீட்டுக்குள் வந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரது மறைவிலும் முதலீட்டாளர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் சுற்றி வரும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, தனது இறப்பை முன்பே கணித்து முக்கியமான முடிவை எடுத்துள்ளார். ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இறப்பதற்கு முன்பே பல வருடங்களாக முதலீடு செய்து சேர்த்து வைத்துள்ள பங்குகள் மற்றும் … Read more

`விலங்குகளே உஷார்': மனிதர்களிடமிருந்து செல்லப்பிராணிகளுக்குப் பரவும் குரங்கு அம்மை!

விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதைக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் முதன் முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று மனிதரில் இருந்து விலங்குக்குப் பரவியுள்ளது என மருத்துவ இதழ் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. Italian greyhound பிரான்சில் இரண்டு ஆண்களுடன் 4 வயதான இத்தாலிய கிரேஹவுண்ட் வகை நாய் ஒன்று வசித்து வந்துள்ளது. ஆண்கள் இருவரும் குரங்கு அம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இவர்களுடன் வசித்து வந்த நாய்க்கு 12 நாள்கள் கழித்து அதன் அடிவயிற்றில் கொப்புளங்கள் … Read more

தனது சுயலாபத்துக்காக கேப்டனை பலிகடாவாக்கும் பிரேமலதா….! தேமுதிகவினர்- நெட்டிசன் குமுறல் – வைரல் வீடியோ

சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உட்காரகூட முடியாத நிலையில், அவரை தூக்கிவந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவரது மனைவி, பிரேமலதா தனது சுயலாபத்திற்காக கொடியேற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைலாகி வருகிறது. அதை காணும், தேமுதிக தொண்டர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தேமுக தலைவராக விஜயகாந்த் ஆக்டிவாக இருந்த வரையில், அந்த கட்சிக்கு தனி வாக்குவங்கியே இருந்து வந்தது. ஆனால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதும், … Read more

10 புதிய பால் பொருட்கள் ஆவின் நிறுவனம் அறிவிப்பு: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை: Cold Coffee, பலாப்பழ ஐஸ்கிரீம், பாஸந்தி உள்பட 10 புதிய பால் பொருட்களை ஆவின் நிறுவனம் அறிமுகம்  செய்கிறது. புதிய பால் பொருட்களின் விலையை ஆக.20ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பார்  என்று தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறியாட்டம்.. ஆப்பிள் தோட்டத்தில் துப்பாக்கிச்சூடு.. பண்டிட் சுட்டுக்கொலை!

India oi-Mani Singh S ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்தில் மீண்டும் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் பண்டிட் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து அதன்பிறகு, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. … Read more

காஷ்மீரில் பண்டிட்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர்பலி, சகோதரர் காயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷோபியான் மாவட்டத்தின் சோடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பண்டிட் சமுதாயத்தை சேர்ந்த சுனில்குமார் மற்றும் பிண்டுகுமார் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடந்தது. அதில், சுனில்குமார் உயிரிழந்தார். பிண்டுகுமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை … Read more