பிரதமர் மோடி பிறந்தநாளன்று நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டுவண்டி போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு

மதுரை : பிரதமர் மோடி பிறந்தநாளன்று நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டுவண்டி போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது. பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டி, குதிரை வண்டி போட்டி நடத்த கோரி ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார். மாவட்ட காவல்துறை கண்காணிபாளரிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை என்று மனுதாரர் புகார் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் தீ: 8 பேர் பலி

India bbc-BBC Tamil தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை பின்னிரவில் ஏற்பட்ட ஒரு பெரும் தீயால் குறைந்தது எட்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த விடுதி அமைந்துள்ள அதே கட்டடத்தின் முதல் தளத்தில் இருக்கும் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டடம் முழுவதும் பரவியது என்று காவல்துறை தெரிவிக்கிறது. திங்கட்கிழமை இரவு சுமார் 10 … Read more

டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள்.. விப்ரோ தொடர்ந்து இன்போசிஸ், அச்சத்தில் ஐடி ஊழியர்கள்..!

வேகமாக மாறி வரும் உலகில், வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது முக்கிய விவாத பொருளாக மாறியிருப்பது Quiet Quitting கலாச்சாரம் மற்றும் Moonlighting, இதில் இந்திய நிறுவனங்களுக்குப் பெரும் தலைவலியாக்க மாறியிருப்பது Moonlighting தான். ஊழியர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கும் இந்திய ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்கு Moonlighting பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. Moonlighting என்றால் என்ன..? அதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை..? Moonlighting-ஐ ஐடி நிறுவனங்கள் எதற்காக எதிர்கிறது..? … Read more

பவர் கட்; பாதியில் கிளம்பிய துரைமுருகன்; பதறிய ஆட்சியர் – அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்!

வேலூர், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்றைய தினம் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கி, தன்னுடைய பள்ளி அனுபவங்கள் பற்றி மலரும் நினைவுகளைப்போல மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பவர் கட் ஆனதால் ‘அப்செட்’ ஆன துரைமுருகன், மைக்கை தட்டி தட்டிப் பார்த்தார். அருகிலிருந்தவர்கள் ‘கரன்ட் கட் ஐயா’ என்று சொன்னதால், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டார். துரைமுருகன் காருக்கு மலர்த்தூவும் பள்ளி மாணவிகள் உடனே, அருகில் அமர்ந்துகொண்டிருந்த மாவட்ட … Read more

பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது! கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ராகுலின் 100 கி.மீ நடைபயணத்திலேயே பா.ஜ.க. ஆட்சி ஆட்டம் கண்டு விட்டது என்றும், பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குற்றம் சாட்டுபவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்கள். நாதுராம் கோட்சேவின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் தான் இத்தகைய கேள்விகளை … Read more

ஒன்றிய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : ஒன்றிய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம், ஷாப்பிங் கார்ப்பரேஷன், பாரத் எர்த்மூவர்ஸ், கன்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

30 வயதில் நடக்கும் விபரீதம்! யார் தந்த சாபமோ? இப்படி ஒரு குடும்பத்தை பார்த்து இருக்க மாட்டீங்க! ப்ச்

International oi-Shyamsundar I ஓட்டவா: கனடாவை சேர்ந்த குடும்பம் ஒன்று உலகம் முழுக்க சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணத்திற்கு பின் இருக்கும் சோக கதைதான் பலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் இடித்த லேமே ஆகியோரின் குடும்பம்தான் இந்த உலக சுற்றுலாவை மேற்கொண்டு உள்ளது. உலகம் முழுக்க இவர்கள் பல நாடுகளுக்கு தங்களின் காரிலேயே செல்லும் திட்டத்தில் உள்ளனர். விரைவில் இந்தியாவிற்கும் வரும் முடிவில் இவர்கள் உள்ளனர். … Read more

புதிய வர்த்தகத்தில் இறங்கும் டாடா குழுமம்.. அடடே இது நல்லா இருக்கே..!

இந்திய வர்த்தகச் சந்தையில் பெரிய நிறுவனங்கள் மத்தியிலான போட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் பிற துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கும் பல பிரச்சனை உருவாகி வருகிறது. உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய், எரிவாயு, ரீடைல், டெலிகாம் துறையில் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது FMCG நிறுவனங்களைக் கைப்பற்றி இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதனால் இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பெரும் தொல்லையாக மாறி வருகிறது. … Read more

“எதிர்பார்ப்போடு வந்தோம் ஏமாற்றமே மிஞ்சியது" – ஜாக்டோ ஜியோ சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

சென்னை தீவுத்திடலில் கடந்த 10-ம் தேதி ஜாக்டோ-ஜியோ `வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் எனக் கூறப்பட்டது. குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கன்னியாகுமரி, மதுரை, கோவை, சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாநாட்டுக்கு வருகை தந்தனர். மு.க. ஸ்டாலின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், … Read more

கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு

கோவை: கோவையில் பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். எஸ்.பி. வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.