நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சை வீடியோ – தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. கைது!

இஸ்லாமியர்களின் இறை தூதராக கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவை கைது செய்யவேண்டும் என்று கோரி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மா தனது உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்கிறார். அவருக்கு அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. ஏற்கனவே நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த இரண்டு பேர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தான் தெலங்கானாவிலும் … Read more

ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு 25ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீடு மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 25ந்தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடியது. அதில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சிகளின் விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி … Read more

பள்ளி மாணவர்கள் தங்கள் பெயரின் இனிஷியலை தமிழில்தான் குறிப்பிட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்கள் தங்கள் பெயரின் இனிஷியலை தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பெயரின் இனிஷியல் மற்றும் கையொப்பத்தையும் தமிழில் இட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவில் பகீர்.. தலைகுப்புற பள்ளத்தில் பாய்ந்த கர்நாடக பஸ்

Tamilnadu oi-Jackson Singh கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பள்ளத்தில் கர்நாடகா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்திருக்கும் பகுதி டம்டம்பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள இந்தப் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதிக்கு கர்நாடாகாவைச் சேர்ந்த பேருந்து ஒன்று 40 சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை வந்துக் கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் பெங்களூரைச் … Read more

பா.ஜ., நிர்வாகி சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்| Dinamalar

பனாஜி: ஹரியானாவை சேர்ந்த பா.ஜ., நிர்வாகியும், டிக்டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவருமான சோனாலி போகத் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 41. கோவாவில்,படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த சோனாலி போகத், ஓட்டலில் தங்கியிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில், … Read more

சூரத் – சென்னை சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை.. சுற்றுச்சூழல் அமைச்சகம் நெருக்கடி..!

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத் திட்டமாக விளங்கும் சூரத்-சென்னை பொருளாதார வழித்தடத்தின் ஒரு முக்கியப் பகுதி கடுமையான பசுமைத் தடையை எதிர்கொண்டு உள்ளது. இந்திய மாநிலங்கள் மத்தியில் தற்போது பொருளாதார வளர்ச்சி குறித்துக் கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் பெரும்பாலான மாநிலங்கள் பல முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டத்தைத் தீட்டி வருகிறது. இப்படிக் குஜராத் முதல் தமிழ்நாடு வரையில் சாலை வாயிலாக … Read more

வீடியோ எதிரொலி: வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு ஒதுக்கியது தமிழகஅரசு…

நாகர்கோவில்: அரசின் நிவாரண தொகை பெற்றபோது, கையில் ரூ.2ஆயிரம் பணத்துடன், தனது பொக்கை வாய் சிரிப்புடன் ஊடகங்களிலும், சமுக வலைதளங் களிலும் பிரபலமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் அவருக்கு வீடு ஒதுக்கி உள்ளார். அதற்கான ஆணை அவரிடம் வழங்கப்பட்டது. தனக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என தனது மனக்குமுறலை பாட்டி வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்ட நிலையில், அதிகாரிகள் உடடினயாக ஆய்வு செய்து, அவருக்கு வீடு ஒதுக்கி, அதற்கான ஆணையை … Read more

புடினுக்கு நெருக்கமானவரின் மகள் கார் வெடிகுண்டில் பலி… இந்தப் பெண்தான் குண்டு வைத்தவரா?

புடினுக்கு நெருக்கமான ஒருவரின் மகள் கார் வெடிகுண்டில் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு உக்ரைன் பெண் பெயர் அடிபடுகிறது. இந்த சம்பவத்துக்கு ரஷ்யா பழிக்குப் பழி வாங்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது.   புடினுக்கு நெருக்கமானவரும் தத்துவவியலாளரும், எழுத்தாளருமான Alexander Dugin என்பவரது மகளும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான Daria Dugina (29) எனும் இளம்பெண் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அந்தக் கார் அவரது தந்தையான Alexanderக்கு சொந்தமானது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட Alexander, கடைசி நேரத்தில் தனது … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி: டிடிவி தினகரன் சாடல்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். பல இடங்களில் தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி திறந்த நிலையில் உள்ளன எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.