தமிழகத்தில் 2021ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்16.2%, மூத்த குடிமக்கள் கொலை 11.3%, கடத்தல் வழக்குகள் 27.7% அதிகரிப்பு! தேசிய குற்ற ஆவணம் அதிர்ச்சி தகவல்…

சென்னை; தமிழகத்தில் 2021ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்  16.2% 2,மூத்த குடிமக்கள் கொலை 11.3 சதவீதம்  கடத்தல் வழக்குகள் 27.7%  அதிகரித்து உள்ளது என தேசிய குற்ற ஆவணம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. அதிகம் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. நாட்டில் 2021ம் ஆண்டில் மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூத்த குடிமக்கள் கொலை 11.3% அதிகரித்து உள்ளது என்று தெரிவித்துள்ளதுடன்,  … Read more

ஆசிய கோப்பை டி20: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

கேரளாவில் மெகா சைஸ் அத்தப்பூ கோலம் வரைந்து உலகசாதனை| Dinamalar

கோழிக்கோடு: ஒணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக கேரளாவில் மெகா சைஸ் அத்தப்பூ கோலம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றில் மிகப்பெரிய அத்தப்பூ கோலம் வரைந்து உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 400 கல்லூரி மாணவர்கள் 30 ஆயிரம் சதுரடி பரபரப்பளவில் 8 நிமிடங்களில் அத்தப்பூ கோலம் வரைந்துள்ளனர். இது ஒரு உலக சாதனை என … Read more

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சிறப்பு விமானங்கள்.. ஏர் இந்தியா அதிரடி திட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கத்தாருக்கு கூடுதல் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக சிறப்பு விமானங்களை கத்தாருக்கு இயக்கப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு விமானங்கள் சென்னையில் இருந்தும் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறித்த தகவலையும் … Read more

28 அடி உயரம் கொண்ட நேதாஜி சிலையை திறந்துவைத்த மோடி! சிலையின் சிறப்புகள் என்னென்ன?

‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படுபவர் சுபாஷ் சந்திர போஸ். இந்திய சுதந்திர போராட்டத் தலைவர்களுள் ஒருவரான இவரின் 125-வது பிறந்தநாள் தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு அதே இடத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 28 அடி … Read more

12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன் தகவல்

வாஷிங்டன்: 12வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கு  ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி, உலக நாடுகளின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது. இருந்தாலும் கொரோனா தொற்று போன்ற நோய்தொற்றுகளை தடுக்க தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க … Read more

கோலி, ராகுல் அதிரடி.. ஆப்கன் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி;  20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடர்நது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி அகளமிறங்க உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி – 122, கே.எல்.ராகுல் 62 … Read more

கோடீஸ்வரர்களை திக்குமுக்காட வைத்த பெங்களூர் மழை.. ரூ.30 கோடி வீடு, பென்டலி கார் எல்லாம் போச்சு..!

இந்தியாவின் ஐடி நகரமாகப் பெங்களூர் அதிகப்படியான மழை காரணமாக மோசமாகப் பாதித்துள்ளது, குறிப்பாகப் பெரும் பணக்காரர்களை இந்த மழை வெள்ளம் பெரிய அளவில் பாதித்துள்ளதால் அனைத்து மட்டங்களிலும் பெங்களூர் நிலை குறித்து விவாதம் நடந்து வருகிறது. பெங்களூரில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கள், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகள், பணக்காரர்களுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீட்டுப் பகுதிகள் என இந்நகரத்தின் எதிர்காலம் எனப் பெருமைக் கொள்ளப்படும் இடங்கள் அனைத்தும் இந்த மழை வெள்ளத்தில் பாதித்துள்ளது. இதிலும் குறிப்பாக இந்த … Read more

தெலங்கானா: “நான் பெண் என்பதாலேயே பாரபட்சம் காட்டுகிறார்கள்!” – கவர்னர் தமிழிசை

தெலங்கானாவின் கவர்னராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ‘தெலங்கானா மக்களுக்கான சேவையில்’ என்ற நிகழ்ச்சி தெலங்கானா ஆளுநர் மாளிகையில் இன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில், ”தன்னலமற்ற சேவையில் சுயத்தை மீண்டும் கடைப்பிடிப்பது” என்ற தலைப்பில் நூலை வெளியிட்டு பேசிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், ”முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும், அவர் கவர்னர் மாளிகைக்கு வர மறுக்கிறார். உண்மையான அன்புடன் மக்களுக்கு பணியாற்ற விரும்பினேன். ஆனால் அந்த முயற்சிக்கு பல தடைகள் … Read more

தமிழகத்தில் அக்டோபர் முதல் மின் கட்டண உயர்வு – 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: தமிழகத்தில் அக்டோபர்  மாததம் முதல் மின் கட்டணம் உயர்வு அமலாசுகும் என்றும், 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படு உள்ளது என்றும்  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வுக்கு மின்சார  ஒழுங்குமுறை ஆணையத் தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. அது கிடைத்தவுடன், திருத்தப்பட்ட புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளார் என்றார். … Read more