தங்கை திருமணத்தில் சோகம்; கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கறிஞர் – 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திருவாரூர் மாவட்டம், நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரின் தங்கையான தையல்நாயகி என்பவருக்குத் திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. அரியலூர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார்களும் மும்முரமாகச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு போன் வந்ததால் அருகிலுள்ள ஹோட்டலில் நின்று பேசிக்கொண்டிருந்தார். … Read more

மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம்

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ பதிவு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மனைவி, குழந்தையுடன் கான்ஸ்டபிள் தற்கொலை| Dinamalar

ஆமதாபாத் :கான்ஸ்டபிளுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவரும் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் ௧௨வது மாடியிலிருந்து குதித்து நேற்று தற்கொலை செய்தனர். குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ௧௨வது தளத்தில் கான்ஸ்டபிள் குல்திப்சின் யாதவ், தன் மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, தங்கள் குழந்தையுடன் … Read more

HDFC வங்கியின் புதிய எஸ்.எம்.எஸ் வசதி.. விண்ணப்பம் செய்வது எப்படி?

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் HDFC வங்கி ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்துள்ள நிலையில் தற்போது புதிதாக எஸ்எம்எஸ் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எஸ்எம்எஸ் வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள அக்கவுண்ட் பேலன்ஸ் உள்பட பல்வேறு தகவல்களை உடனடியாக பெற்று கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் 2 … Read more

செப்டம்பர் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 110-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 110-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய ஒற்றுமை பயணம் 2வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி

கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணம் ராகுல்காந்தி 2வது நாள் பயணத்தை தொடங்கினார். பயணத்தை தொடங்கு முன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசின் 3 பஸ்கள் ஜப்தி புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி| Dinamalar

புதுச்சேரி : விபத்து இழப்பீடு, பணிப்பலன் தராத வழக்கில், புதுச்சேரி நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூன்று பஸ்கள் நேற்று ‘ஜப்தி’ செய்யப்பட்டன. புதுச்சேரி, குருமாம்பட்டை சேர்ந்தவர் முருகானந்தம், 50; பீர் கம்பெனி ஆபரேட்டர். கடந்த 2010ல், ‘ஜிப்மர்’ அருகே, தமிழக அரசு பஸ் மோதி மே 17ல் இறந்தார்.கோர்ட் உத்தரவுப்படி, வட்டியுடன் 38.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.இழப்பீடு வழங்காததால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய மூன்றாவது கூடுதல் … Read more

இந்த நகரத்திற்கு மட்டும் மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம்.. டிசிஎஸ், விப்ரோ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற நடைமுறையை அமல்படுத்தின என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பியதை அடுத்து சமீபத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை தங்கள் அலுவலகங்களுக்கு வரவழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்நகரில் மட்டும் டிசிஎஸ், விப்ரோ உள்பட … Read more