மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் #AppExclusive

ஒரு நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதற்காக வாளேந்திய மன்னர்கள் வரலாறு நெடுக பலருண்டு! உலகெங்கும் நாடுகளின் எல்லைகளை நிர்ணயித்தது யுத்தங்கள்தான் என்பது கசப்பானதொரு உண்மை. அலெக்ஸாந்தர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போன்றவர்கள் போர்க்களத்தில் குதித்ததால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்! இருப்பினும் வரலாறு மேற்கண்ட மன்னர்களையும் அவர்கள் ஈடுபட்ட போர்களையும் ஏற்றுக் கொள்கிறது! அவர்கள் மாவீரர்கள் என்று போற்றப்பட்டார்கள்! ஆம், யுத்தத்தை கடவுள்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள்! இருப்பினும் இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து முடிவதற்குள் யூதர்கள் மீது ஹிட்லர் கட்டவிழ்த்த … Read more

3வது டி20 – இந்திய அணி தோல்வி

பர்மிங்காம்: 3வது டி20 – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த் போட்டியில் டாஸ் என்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 215 ரன்கள் எடுத்தது. 216 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் மட்டுமே எடுத்து. தோல்வியடைந்தது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை

தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம்; கர்நாடகத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்

பெங்களூரு: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் நிலச்சரிவால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 51 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. … Read more

“சேது… என் நண்பன்… நந்தா… நானேதான்!” – பாலா #AppExclusive

“நந்தா ரெடியாகிட்டான். இன்னும் க்ளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி” எடிட்டிங்கில் இருந்து எழுந்து வருகிறார் டைரக்டர் பாலா. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற டைரக்டர்.  தீபாவளி ரேஸில் முரட்டுக் குதிரையாக களம் இறங்கப்போகிற நந்தா பற்றி பாலாவிடம் பேசியதிலிருந்து.  “நந்தா யாரு?”  “மனசுக்கும் புத்திக்கும் மத்தியில வண்டி ஒட்டறதுதான் வாழ்க்கை நட்பு. உறவு, காதல்னு ஆரம்பிச்சு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் அழுக்கு இருக்கு. ஒரு தாய் தன் பிள்ளை மேல வைத்திருக்கிற பாசத்தைத்தான் உலகத்திலேயே உசத்தியான விஷயமா … Read more

ஜூலை-11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 51-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 51-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முதியோர் மருத்துவமனையில் டாங்கி தாக்குதல்: குற்றத்தை மறைக்க ரஷ்ய வீரர்கள் செய்த அவலமான செயல்

உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரஷ்ய ராணுவம் நடத்திய டாங்கி தாக்குதலில் 56 பேர் வரை கொல்லப்பட்டதாக அந்த பகுதியின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர், Serhiy Hayday தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 140 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், லுஹான்ஸ்க்கின் கிரெமென்னாயா பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதியோர்களை குறிவைத்து ரஷ்ய … Read more

ஜூலை-11: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் கடந்த  50-வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகன் கைது..!

பரான், ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹயலால் (வயது 70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (வயது 35) தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்ததும், சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. குடும்பத்துக்கு அவப்பெயர் … Read more