கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி திடீர் மரணம்

பெங்களூரு: கர்நாடக உணவுத் துறை மந்திரி உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்தார். உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. இதில் வனம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி. அவருக்கு வயது 61. பா.ஜனதா மூத்த தலைவரான இவர், பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்தார். … Read more

உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.06 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.87 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப் – 07 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அ.தி.மு.க., விவகாரம்பன்னீர் மேல்முறையீடு| Dinamalar

புதுடில்லி, அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில், ஜூலை 11-ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இது தொடர்பாக, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 11ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பளித்தார்.தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த இரு நீதிபதிகள் … Read more

மின்வாரிய தேர்வு முறைகேடு; மேலும் 3 பேர் சிக்கினர்

பெங்களூரு: கர்நாடக மின்சாரத்துறையில் காலியாக இருந்த 600 இளநிலை பொறியாளர் பதவிக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி தேர்வு நடந்தது. பெலகாவி மாவட்டம் கோகாக்கில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் சிலர் தேர்வின் போது முறைகேடு செய்து இருந்தனர். இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை கோகாக் … Read more

"இதற்குத்தான் கடவுள் 2 கைகளை கொடுத்துள்ளார்" ஆண்டுதோறும் ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசி! அமெரிக்கா திட்டம்

காய்ச்சலைப் போலவே ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் கோவிட் பூஸ்டர் டோஸ் ஊசியையும் எடுக்கலாம். காய்ச்சல் (influenza) தடுப்பூசிகளைப் போலவே கோவிட் பூஸ்டர்களும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்படலாம் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர். கடந்த வாரம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) அங்கீகரித்து, கொரோனா வைரஸின் அசல் திரிபு (original strain) மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் BA.4 மற்றும் BA.5 வரிசைகளுக்கு … Read more

கர்நாடக அமைச்சர் மாரடைப்பால் காலமானார்| Dinamalar

பெங்களூரு: பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி சட்டசபை தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,வும், கர்நாடக வனத்துறை மற்றும் உணவு பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் உமேஷ் கத்தி, மூத்த அமைச்சரான இவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்றார். இரவில் டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு வந்தார். உணவு சாப்பிட்ட பின்னர் கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வராததால், சமையல்காரர் கழிப்பறை கதவை தட்டினார்.எந்த பதிலும் வராததால் மற்ற ஊழியர்களை அழைத்து வந்து கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது … Read more

உறவினர்களை மதம் மாற்ற முயற்சி; தம்பதி மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் துளசிதாஸ் என்கிற யேசுதாஸ். இவரது மனைவி தேவி என்கிற மேரி. இவர்கள் 2 பேரும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தனர். இந்த நிலையில் லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வரும் உறவினர்கள் சிலரை துளசிதாசும், தேவியும் சேர்ந்து மதம் மாற்றம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சன்னப்பட்டணா புறநகர் போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை … Read more

ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

ஆசிய கோப்பை 2022 தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை 2022 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் முதன்முறையாக மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாயிற்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை … Read more

எல்லையில் துப்பாக்கி சூடுபாக்., ராணுவம் விஷமம்| Dinamalar

ஜம்மு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு நம் படைகள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளன.ஜம்மு – காஷ்மீரில் எல்லையில், 2021 பிப்., 21 முதல் போர் நிறுத்தம் செய்வதாக இந்தியா, பாகிஸ்தான் அறிவித்தன. இதன்பின் பாக்., ராணுவம் பெரிய அளவில் தாக்குதலில் ஈடுபடவில்லை.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் அர்னியாவில் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து பாக்., ராணுவம் நேற்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. எல்லைக்கு … Read more