சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம் விளாசிய அயர்லாந்து இளம் வீரர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து வீரர் டெக்டர் முதல் சதம் அடித்தார். நியூசிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டப்லினில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மெக்பிரின் 39 ஓட்டங்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இளம் வீரர் ஹேரி டெக்டர் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். நங்கூரம் போல் … Read more

இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாரு வெக்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக பொதுகுழு கூட்டம் கூட இருக்கிறது. இதன் காரணமாக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றாற் போல் மாற்றி அமைத்துக்கொள்ள போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதலே … Read more

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மைசூரு : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய இரண்டு அணைகளிலிருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மாண்டியா, மைசூரு, ஹாசன், பெங்களூரு ரூரல், ராம்நகர் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, கபினி, ஹேமாவதி என காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளின் நான்கு அணைகளுக்கும் தண்ணீர் … Read more

சீறிப்பாயும் சிங்களச் சுனாமி! விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து

இலங்கையின் சிங்கள பெளத்த பேரினவாத பாசிஸ்டுகளை அந்த நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர் என தமிழ்நாட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் காலிமுகத் திடலில் ஜூலை 9ம் திகதியான சனிக்கிழமை காலை தொடங்கிய … Read more

சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து மாதம் 1.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய 81 சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு…

டெல்லி ரோகினி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அதற்காக மாதம் ரூபாய் 1.5 கோடி செலவு செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொருளாதார குற்றவியல் பிரிவு துணை ஆணையர் வீரேந்தர் செஜ்வென் அளித்த புகாரை தொடர்ந்து சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 81 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டி.டி.வி. தினகரன் சார்பாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற … Read more

காளி தேவியின் ஆசி இந்தியாவுக்கு உண்டு: மோடி| Dinamalar

கோல்கட்டா : ”காளி தேவியின் அளவற்ற ஆசி, எப்போதுமே இந்தியாவுக்கு உண்டு. ஒரே பாரதம், மகத்தான பாரதம் என்ற கொள்கையைத் தான், நம் நாட்டின் ஞானிகள் உறுதியாக பின்பற்றி வந்துள்ளனர்,” என, பிரதமர் மோடி பேசினார். மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவரான சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், காளி தேவியைப் பற்றி தெளிவான பார்வை உடையவர். அவரது சீடரான … Read more

Live: அதிமுக பொதுக்குழு கூட்டம்: `தீர்ப்புக்கு முன்னரே தீர்மானம்’ – எடப்பாடி திட்டம்? ; ஓ.பி.எஸ் தரப்பு திட்டம் என்ன?

பன்னீர்செல்வத்தின்  திட்டம் என்ன? பன்னீர் – எடப்பாடி நாளை பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேராக தலைமைக் கழகம் செல்வார் எனத் தகவல். தென் மாவட்டங்களில் இருந்து அதிகமாக தன் ஆதரவாளர்களை வரவழைத்திருக்கிறாராம். டெல்டாவிலிருந்து வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களும் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு வர தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நேராக தலைமைக் கழகத்தை முற்றுகையிட்டு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்கிறார்கள். தீர்ப்புக்கு முன்னரே பொதுக்குழு  – எடப்பாடி திட்டம்? 9 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் நிலையில் காலை 6:15 … Read more

சண்டிமல் அபார சதம் விளாசல்! இலங்கை 400 ஓட்டங்கள் குவிப்பு

காலே டெஸ்டில் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமல் 13வது சதத்தினை பதிவு செய்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி 400 ஓட்டங்களை கடந்து விளையாடி வருகிறது. கேப்டன் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோர் சதத்தை தவறவிட்ட நிலையில், மற்றோரு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சண்டிமல் சதம் விளாசியுள்ளார். இது அவருக்கு 13வது டெஸ்ட் சதம் ஆகும். அவர் 203 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்து … Read more

தமிழ்நாட்டில் இன்று 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 804 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 804, செங்கல்பட்டில் 434, திருவள்ளூரில் 151 மற்றும் காஞ்சிபுரத்தில் 78 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 119, திருநெல்வேலி 88, தூத்துக்குடி 65, சேலம் 55, கன்னியாகுமரி 70, திருச்சி 48, விழுப்புரம் 34, ஈரோடு 32, ராணிப்பேட்டை 56, தென்காசி 41, மதுரை 38, திருவண்ணாமலை 24, விருதுநகர் 66, கடலூர் 22, தஞ்சாவூர் 23, திருப்பூர் 29, … Read more

பா.ஜ., தலைவர் புது கணிப்பு| Dinamalar

பெங்களூரு : ”வாரிசு அரசியல், ஜாதி அரசியலால் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் அழிவு நிலைக்கு சென்று கொண்டுள்ளது. சித்தராமையா, சிவகுமார் இடையே நாற்காலி போர் ஆரம்பித்துள்ளது. சித்தராமோற்சவம் நடந்த பின், மாநில காங்கிரஸ் இரண்டாக பிளவுப்படும்,” என மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் கணித்துள்ளார். கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில், ஹாசனில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மாநில பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் … Read more