“சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் ஊழல்வாதிகள்" – கே.சி.பழனிசாமி காட்டம்
முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி தலைமையில் விழுப்புரத்தில் அதிமுக உறுப்பினர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.சி.பழனிசாமி, “அதிமுக-வில் அம்மாவின் மறைவுக்குப் பிறகு இருக்கும் பிரச்னையே என்னவென்றால், அடிமட்டத்திலுள்ள தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை. பொதுக்குழு உறுப்பினர்களும், கட்சியின் முக்கியஸ்தர்களும் என்ன கருதுகிறார்களோ அதையே கட்சியின் முடிவாக அடிமட்ட உறுப்பினர்கள் இடத்தில் திணிக்கப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்கின்ற கருத்து பொதுவெளிக்கு வருவதில்லை. எம்.ஜி.ஆர் இருக்கும் போது அடிக்கடி மாநாடுகள் … Read more