ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமாரி: ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 08.09.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் 2வது சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.