கொரோனாவுக்கு உலக அளவில் 6,503,441 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 610,175,670 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 610,175,670 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 586,827,610 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,291  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

63 துப்பாக்கிகள் பறிமுதல் ம.பி.,யில் 3 பேர் கைது| Dinamalar

போபால் : சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ௬௩ துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கைலாஷ் சிங், சோனு சிங் மற்றும் கோரிலால். இவர்கள் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்று வந்தனர். இவர்கள் மீது, ௨௪க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்து விசாரணை நடத்திய பஞ்சாப் போலீசார், நேற்று மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் … Read more

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

கலபுரகி: கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சங்கலங்கி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா (30). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். பின்னர் மரகொளா கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடத்தி சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து … Read more

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் வார்டு பெயர் மாற்றம்| Dinamalar

கோரக்பூர் : உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யும் பணியில், முஸ்லிம் பெயர்களை உடைய வார்டுகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வரின் சொந்த ஊரான கோரக்பூர் நகராட்சியில் உள்ள வார்டுகளை மறுவரையறை செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதன் வாயிலாக வார்டுகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.பல்வேறு வார்டுகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, முக்கிய பிரமுகர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இல்லாஹி பாக் வார்டு … Read more

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை-சாதனை விளக்க மாநாடு, சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தனர்

பெங்களூரு: பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் தொட்டபள்ளாப்புராவில் வருகிற 8-ந் தேதி சாதனை விளக்க மாநாடு மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், … Read more

உயரிய ரமோன் மக்சேசே விருதை வாங்க மறுத்த முன்னாள் கேரள அமைச்சர் ஷைலஜா; காரணம் இதுதான்!

ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் ரமோன் மக்சேசே விருது, மறைந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ‘ரமோன் மக்சேசே’ பெயரால் வழங்கப்படுகிறது. 1958ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சமூகத்திற்குத் தன்னலமற்ற சேவை செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 67-வது ‘ரமோன் மக்சேசே’ விருது நிபா வைரஸ் தொற்று, கோவிட் பெருந்தொற்று காலங்களில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகக் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜாவுக்கு ‘ரமோன் மக்சேசே’ விருது … Read more

3வது பெரிய பொருளாதார நாடாக 2030ல் இந்தியா உருவெடுக்கும்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ‘வரும் 2030ல், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்’ என நிபுணர்கள் கணித்துஉள்ளனர். ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் தரவுகள், டாலருக்கு எதிரான பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, உலக நாடுகளின் பொருளாதார நிலையை வரிசைப்படுத்தி, ‘புளூம்பெர்க்’ நிறுவனம் பட்டியல் வெளியிட்டது. முன்னேற்றம்அதில், கடந்த ஏப்., – ஜூன் காலாண்டு கணக்கின்படி, உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி … Read more

சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மைசூரு தொண்டு நிறுவனம் வலியுறுத்தல்

பெங்களூரு: மைசூருவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குனரான ஸ்டான்லி கே.வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதியான சிவமூர்த்தி முருகா சரணரு, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். அந்த சிறுமிகள் முதலில் மைசூருவில் உள்ள ஒடநாடி தொண்டு நிறுவனத்தில் வந்து தான் தஞ்சம் அடைந்திருந்தார்கள். சித்ரதுர்கா மடாதிபதி மீது பாலியல் வழக்கு பதிவாக எங்களது தொண்டு நிறுவனமே காரணமாக இருந்தது. சித்ரதுர்கா மடாபதி மீதான பாலியல் வழக்கு குறித்து … Read more

முருக மடத்தின் நிர்வாக அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

பெங்களூரு: சித்ரதுர்கா மாவட்டத்தில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வருகிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மடாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முருகா மடத்தின் நிர்வாக அதிகாரியாக, கர்நாடக ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியான வஸ்துரமடா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர், இதற்கு முன்பு சித்ரதுர்கா மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகவும் பணியாற்றி இருந்தார். மடாதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவதற்கு பின்னணியில் தற்போது இருக்கும் நிர்வாக அதிகாரி … Read more

பொருட்காட்சியில் சரசரவென சரிந்த டவர் கோபுரம்..! குழந்தைகள் உட்பட பலர் காயம்.. பதற வைக்கும் வீடியோ

India oi-Vigneshkumar மொஹாலி: பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல அங்கு பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர், குழந்தைகள் உட்பட பலர் அதில் இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேலே இருந்து அந்த ராட்டினம் … Read more