ஜனநாயகன் ரிலீஸ் எப்போது ? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் விநியோகிஸ்தர்கள் குழப்பம்… வழக்கு முழு விவரம்…

விஜய் நடித்துள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’  ஜனவரி 9, 2026, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகாது என்றும், தங்களின் புதிய வெளியீட்டுத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நேற்றிரவு அறிவித்தது. தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் வெளியீட்டை ஒத்திவைத்திருப்பதால் விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி … Read more

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்ட மற்றவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். கானா வினோத் நண்பருடன் முன்னதாக இந்த … Read more

தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை! அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை – ஒபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை டெல்லியில் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். உள்துறை அமைச்சர் இரண்டு தமிழ்நாட்டில் முகாமிட்டிருந்தபோது சந்தித்து பேசாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா டெல்லி சென்ற பிறகு, அங்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக கூட்டணியில் ஒபிஎஸ், சசிகலா, டிடிவி அணிகள் இணைய வாய்ப்பு … Read more

Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?

டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி சேவைகளுக்குப் பஞ்சமே இல்லை. இவை எல்லாமே தனியார் ஆப்கள்.  இப்போது மத்திய அரசாங்கமே ஒரு டிராவல் ஆப்பைத் தொடங்கி, அதை நடைமுறையும் படுத்திவிட்டது. அதன் பெயர்தான் Bharat Taxi. முதன் முதலில் இதை டெல்லியில்தான் ஓட்டம் பார்த்திருக்கிறார்கள்.  போன வாரம், மோட்டார் … Read more

66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக அமெரிக்கா முடிவு – டிரம்ப் அதிரடி உத்தரவு

உலகளாவிய ஒத்துழைப்பில் இருந்து மேலும் பின்வாங்கும் வகையில், அமெரிக்கா 66 சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. இந்த அமைப்புகள் வெறும் லெட்டர் பேட் அமைப்புகள் என்று டிரம்ப் நிர்வாகம் வர்ணித்துள்ள நிலையில் இதிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 7, 2026 அன்று கையெழுத்திட்டுள்ளார். இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் சபை (UN) சார்ந்த நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் ஆகும். குறிப்பாக காலநிலை … Read more

மாதவ் காட்கில்: “வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் காலமானார்.. மக்கள், இயற்கை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கிய மாதவ் காட்கில், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகச் செயலாற்றினார். 2010-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட காட்கில் ஆணையம் என்று பிரபலமாக … Read more

அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – அவருடன் எடப்பாடி பேசியது தெருக்கூத்து! ராமதாஸ்

சென்னை: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்”  என்று கூறிய பாமக நிறுவனர்  ராமதாஸ் அவருடன் கூட்டணி குறித்து  எடப்பாடி பழனிச்சாமி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என கூறினார். அன்புமணி ஒரு மோசடிப்பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கதல்ல. அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு  என்றவர்,  கூட்டணி குறித்து பேச கட்சி நிறுவனரின் அனுமதி பெறவேண்டும் என கட்சி விதிகளில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சந்திப்பு ஒரு … Read more

சோதனையின்போது உள்ளே நுழைந்த மம்தா; ஆவணங்களைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டும் ED – நடந்தது என்ன?

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிருக்கின்றனர். ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது. ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா ஆவணங்களைக் … Read more

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது!

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்றுமுதல் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் – தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜனவரி 5ந்தேதி  … Read more

"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" – திருமாவளவன்

திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறது. தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கிறது. தவெக தலைவர் விஜய் இதுதான் தற்போது நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் நிலைமை. விஜய் பெரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், அவர் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று … Read more