தமிழ் சினிமாவின் தந்தை `நடராஜ முதலியார்' – வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர்!

தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கம் இயக்குநர் நடராஜ முதலியார். இன்று பெரிய ஆலமரமாகக் கிளைகளோடு படர்ந்து விரிந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு முதல் விதை போட்டவர் நடராஜ முதலியார்தான். தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ படத்தை இயக்கிய நடராஜ முதலியார் மறைந்து இன்றோடு 55 ஆண்டுகள் ஆகின்றன. நடராஜ முதலியார் இந்தத் திரைப்படத்தில் தொடங்கி, புராணக் கதைகளை வைத்துப் பல்வேறு சினிமாக்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார். நடராஜ முதலியார் பற்றியும், அவர் இயக்கிய சினிமாக்கள் பற்றியும் நேரடி … Read more

Ronaldo: "எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது" – ரொனால்டோ உருக்கம்

சவுதி ப்ரோ லீக்கில் அல் ஆலி அணியை வீழ்த்திய பிறகு அல் நசார் க்ளப் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. கால்பந்து விளையாடுவது குறித்து பேசிய ரொனால்டோ, “எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது. இந்தத் தலைமுறைக்காக மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்காகவும், வரப்போகும் தலைமுறைக்காகவும் தொடர்ந்து விளையாடுகிறேன். கிறிஸ்டியானோ ரொனால்டோ எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவை நான் நெருங்கினாலும், ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு போட்டியையும் நான் ரசித்து விளையாடுகிறேன். இந்த லீக் தொடரை … Read more

CSK : தோனிக்கு என்னதான் பிரச்னை? அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை? – தெளிவாக விளக்கும் மைக் ஹஸ்ஸி!

சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி வந்திருந்தார். தோனியின் காயத்தை பற்றியும் அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை என்பது பற்றியும் மிகத் தெளிவாக பேசியிருந்தார். Hussey மைக் ஹஸ்ஸி பேசியவை, ‘தோனி வேகமாக குணமடைந்து வருகிறார். தோனி வெகுவிரைவிலேயே களத்தில் இறங்கி விளையாடுவார். அது அடுத்தப் போட்டியாகவும் இருக்கலாம் அல்லது இன்னும் இரண்டு … Read more

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதனால் படகு மிகவும் ஆட்டம் காண ஆரம்பித்தது. படகு கடுமையான நிலை தடுமாறியதால் உள்ளே தண்ணீர் சென்றது. பயணிகள் அதிர்ச்சியில் உதவி கேட்டு கத்த ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் படகில் தண்ணீர் அதிகரித்து படகு கவிழ்ந்தது. படகில் இருந்த லைஃப் ஜாக்கெட் அணிந்து சிலர் … Read more

திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 'சூப்பர் ஸ்டார் ரஜினி கோவிலில்' 16 வகை அபிஷேகம்! | Photos

ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் ரஜினி கோவிலில் “ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவோம்” – மதுரை ரஜினி காந்த் ரசிகர்கள் ஆவேசம் Source link

தத்துவமசி: தகப்பன் சாமியும் தாரக மந்திரமும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் காலம்… 30 கொ.மு. (கொரோனாவிற்கு முன்!)  இலக்கியாவிற்கு வயது 7.  தில்லை அவள் ஊர். அப்பா சிதம்பரம்  பல்கலைக்கழகத்தில்  பேராசிரியர். கார்த்திகை மாதம் மாலை அணிந்து, நேர்த்தியாகவே விரதமிருந்து, பார்த்த சாரதியின் மைந்தனை கடந்த ஒரு தசாப்தமாய் தரிசித்து வருபவர்!  அண்ணன் பரதன்.  இலக்கியாவை … Read more

'மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது' – வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ஒரே நாளில் 993 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 19 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் 3,239 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச்சில் 144 ரூபாயும், ஏப்ரலில் 200 ரூபாயும் உயர்த்தப்பட்டது. அதே … Read more

ஆசை 1x ; மகிழ்ச்சி 10x ! – 90'ஸ் கிட் தொலைக்காட்சி அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் 80ஸ்-90ஸ் கிட்ஸ் மட்டுமே அனுபவித்த மற்றுமொரு அரிய பொக்கிஷம் – ‘தூர்தர்ஷன்’  தொலைக்காட்சி! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது… எங்கள் தெருவில், மூன்றாவதாக தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிய பெருமை எங்களுடையது!  அழகிய வீடு. பெரிய டி.வி. அறை. அடுப்படியிலிருந்தும் சமைத்துக் கொண்டே டி.வி. பார்க்கலாம்!  அதற்கடுத்தாற்போல் … Read more

தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' – எச்சரிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

தேர்தல் பிரசாரத்திற்காகக் குழந்தைகளை உணர்வு ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் மற்றும் அக்கட்சியின் பிரசாரப் பிரிவினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ஆகியோருக்கு ஆணையம் கடந்த 28-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது. தவெக விஜய் அந்தக் கடிதத்தில், “நடிகர் விஜய் … Read more

"இந்தியர்கள் வேண்டாம்..!" – தைவானில் அரசின் முடிவுக்குக் கிளம்பும் எதிர்ப்பும் எதார்த்த நிலையும்!

தைவானில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, இந்தியாவுடன் தைவான் அரசு 2024-ம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக சுமார் 1,000 இந்தியத் தொழிலாளர்கள் இந்த ஆண்டிலேயே தைவான் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், இந்தத் திட்டம் தற்போது அந்நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு தைவானின் எதிர்க்கட்சியான குவோமின்டாங் (KMT) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியத் தொழிலாளர்கள் ஒப்பந்தங்களை மீறி “தலைமறைவாக” (Absconding) வாய்ப்புள்ளதாகவும், இது அந்நாட்டின் … Read more