காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள் விரட்டியடிப்பு

ரஜோரி, ஜம்மு மற்றும் காஷ்மீரில், போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டாக நேற்று நடத்திய தேடுதல் வேட்டையின்போது, சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் இருந்து சீன தயாரிப்பு கைத்துப்பாக்கி, வெடிக்க தயார் நிலையிலுள்ள தோட்டாக்கள், சீன தயாரிப்பு கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா-ரஜோரி பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்றிரவு சில டிரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்தன. … Read more

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை. அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர். அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் … Read more

இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கைத் தமிழர்கள் விவகாரம்  குறித்து  பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை என வலியுறுத்தி உள்ளார். இலங்கை அரசியலமைப்பு திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டு … Read more

`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி… காரணம் என்ன?

மும்பையில் வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் தாராவி மற்றும் மலாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்படி பிரசாரம் செய்தபோது மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசும் ஆட்சியில் இருக்கிறது என்றும், எனவே மும்பையில் … Read more

"அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள்" – கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு, எம்.பி விஜய்வசந்த், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை தேவயானி, “கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள்கூடி ஒற்றுமையாக பொங்கலிடும் இந்த காட்சி மனதுக்கு மிகவும் … Read more

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" – திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகதான் எதிர்த்ததாம் எனக் கூறியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் எனவும், அப்போது இந்தி ஆட்சி மொழியாக வராமல் இருந்ததற்குக் காரணம் சஞ்சீவி ரெட்டிதான் எனவும் செய்தியாளர்களிடையே அவர் பேசியிருக்கிறார். பராசக்தி திருச்சி வேலுசாமி பேசுகையில், “இன்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அப்படத்தைத் தயாரித்தது தமிழகத்தின் ஆளுங்கட்சி. அதில் வசனங்கள் … Read more

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கரூர் மற்றும் திருச்சியில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது கண்டறியப்பட்டு, 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு துறை தரப்பில் விசாரித்தோம். “கரூர் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமி கடந்த 2021- … Read more

Grok AI சர்ச்சை: 'இந்திய சட்டத்தின் படி நடப்போம்' – தவறை ஒப்புக்கொண்ட எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம், தனது Grok AI மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு 600 கணக்குளை ஒப்புக்கொண்டிருக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எக்ஸ் தளத்தின் Grok AI மூலம் ஆபாச உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவதற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. Grok AI இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தளத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளை ஒப்புக்கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்போம் என்றும் உறுதி … Read more

`எழுத்துலகம் பெரிய கடல்; அதில் கால்களையாவது நனைத்திடுங்கள்!' – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனை, சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்து உரையாற்றினோம். நம்மிடம் பேசிய அவர், “இன்றைய இளைஞர்கள் ஜென்சி கிட்ஸ் என்ற கருத்தாக்கத்தையே நான் ஏற்க மறுக்கிறேன். ஏனென்றால், இந்த தலைமுறையைச் சேர்ந்த 100 இளைஞர்களை எடுத்துக் கொண்டால் 100 பேரும் ஒரே விதத்தில் இருப்பதில்லை. 10 பேர் அரசியலை பின்பற்றுவார்கள்,10 பேர் விளையாட்டை பின்பற்றுவார்கள், 10 பேர் சினிமாவை பின்பற்றுவார்கள், 10 பேர் மது மற்றும் போதையின் பிடியில் சிக்கி இருப்பார்கள். ஆக … Read more