தென்காசி: "என் டிராக்டரை மீட்டுத் தாங்க" – ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி

தென்காசி மாவட்டம் குருவி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் யேசு ராஜன் (46). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரிடமிருந்து. இவருக்குச் சொந்தமான டிராக்டரைக் கடந்த 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மாதம் வாடகையாக ரூ.27 ஆயிரம் தருவதாகக் கூறி எடுத்துச் சென்றதாகவும், ஆனால், வாடகையைக் கொடுக்காமல், டிராக்டரை வேறு நபருக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. ஜேசு ராஜன் இது குறித்து யேசுராஜன் குருவிகுளம் காவல் நிலையம் … Read more

அடிப்படை வசதிகள் இல்லை: தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் 10மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை: அடிப்படை வசதிகள் இல்லை என கூறி தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் சுமார் 10 மணி நேரம்  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.  இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தரமணி பகுதியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு போதுமான வசதிகள் இல்லை என மாணவிகள் தரப்பில் பல முறை புகார் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தண்ணீர் உள்பட அடிப்படை … Read more

ஆபரேஷன் சிந்து: இதுவரை 2,858 இந்திய நாட்டினர் மீட்பு

புதுடெல்லி, ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. ஈரானில் உள்ள தங்களுடைய நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டு கொண்டன. அவர்களை மீட்கும் முயற்சிகளையும் மேற்கொண்டன. இதன்படி, … Read more

ரயில் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படுகிறதா? – எப்போது, எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் ‘பாக்கெட் ஃபிரெண்ட்லி’ டிராவல் ஆப்ஷன் என்றால், அது ‘ரயில்’ தான். சாதாரண மக்கள் முதல் பணக்காரர்கள் வரை யார் வேண்டுமானாலும், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப எளிதாகவும், வசதியாகவும் ரயிலில் பயணம் செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ரயில் டிக்கெட்டுகளின் விலை ஏற்றப்படலாம். அதற்கான அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தியன் ரயில்வே ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம். மேலும், இந்த அறிவிப்பு மக்களுக்கு சுமையாகவும் … Read more

சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை இடையே சனி, ஞாயிறுகளில் 21 மின்சார ரெயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை:  ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை மற்றும் சூலூர் பேட்டை செல்லும் ரயில்கள் சனி, ஞாயிறுகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பில்,   சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால்  28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதிகாலை 5.40, காலை … Read more

'ரீல்ஸ்' வீடியோவுக்கு காதலன் எதிர்ப்பு… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சைதன்யா (வயது 22). இவர் துமகூருவில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அழகு கலை நிபுணராகவும் இருந்து வந்தார். இதனால் அடிக்கடி வித்தியாசமாக ‘ரீல்ஸ்’ வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் சைதன்யாவுக்கும், ராமேனஹள்ளியை சேர்ந்த விஜய் (25) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் … Read more

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள் | Automobile Tamilan

750 கிலோ பேலோடு பெற்ற ரூ.3.99 லட்சம் ஆரம்ப விலையில் துவங்குகின்ற பெட்ரோல் டாடா ஏஸ் புரோ தவிர சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான ஆப்ஷனிலும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. இந்தியாவின் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்ற நான்கு சக்கர மினி டிரக் மாடலாக விளங்கும் ஏஸ் புரோ மாடலில் AIS096 ஆதரவுக்கு ஏற்ற வலுவான பாடி கொண்டிருக்கின்ற 1985x1425X275 கார்கோ அளவை பெற்று ஹாப் டெக் அல்லது பிளாட்பெட் போன்ற கார்கோ ஆப்ஷனில் … Read more

TNPL-2025: லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி.! | Album

TNPL-2025: கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி.! Source link

வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி தேவை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதி தேவை என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அத்திக்கடையில் ஒரு வீட்டை கிறிஸ்தவ மதபோதகர் ஜோசப் வில்சன் என்பவர் விலைக்கு வாங்கி இந்த வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரித்து உள்ளார். பிறகு இந்த கட்டிடத்துக்கு கட்டிட அனுமதியும், தேவாலயம் கட்டுவதற்கு திட்ட அனுமதியும் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் … Read more

நாளை இந்திய வீரர் விண்வெளி பயணம்

டெல்லி நாளை இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்பயணம் மேற்கொள்வதாக நாசா அறிவித்துள்ளது.’ பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்’ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்த  நிலையில் பலமுறை இந்த விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், … Read more