சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக செல்லப்பட உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில்  நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27ந்தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் மட்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,  , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிறு – ஆகஸ்டு 31) … Read more

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

ஏதெர் எனர்ஜியின் EL பிளாட்ஃபார்ம் மற்றும் அதன் அடிப்படையில் EL01 என்ற கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் உற்பத்தி நிலை மாடல் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. Ather EL Platform ஏதெரின் EL பிளாட்ஃபார்ம் ஆனது 26 லட்சம் கிமீ டேட்டா கொண்டு உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம் ஆக அமைந்திருப்பத்துடன், இதனை பயன்படுத்தி பல்வேறு மாடல்கள் மற்றும் மாறுபட்ட வடிவங்கள் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் … Read more

“காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' – CPM பெ.சண்முகம்

“சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் ‘நாட்டைக் காப்போம்’ அமைப்பு சார்பில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் சண்முகம் பேசும்போது, “மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சாதி கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளில் … Read more

ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு? முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி…

சென்னை:  மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வரி குறைப்பால் தமிழ்நாடு  தேசிய சராசரியை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்று அச்சம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரியை  மத்திய பாஜக அரசு கொண்டுவரும்போது, அதை எதிர்ப்பதில், முதன்மையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஜிஎஸ்டி வரியில் சில சீர்திருத்தம் செய்து, பொதுமக்கள் பயன்படும் வகையில், வரி குறைக்க எடுக்கும் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.  GST … Read more

Renault Kwid Facelift launch soon – புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

ரெனால்ட் இந்தியாவின் ட்ரைபர், கிகர் என இரண்டின் அறிமுகத்தை தொடர்ந்து க்விட் ஃபேஸ்லிஃட் மாடலை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கலாம். 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் விலை க்விட் ஆனது ஆரம்பத்தில் 0.8லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு என்ஜின் ஆப்ஷனை பெற்றிருந்த நிலையில் காலப்போக்கில் மாசு உமிழ்வு மேம்பாடுகளை தொடர்ந்து 0.8 லிட்டர் என்ஜின் நீக்கப்பட்டது. … Read more

US: நடுரோட்டில் `கட்கா' வாளை சுழற்றிய குர்ப்ரீத் சிங்; சுட்டுக்கொன்ற போலீசார் – அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங். சுமார் 35 வயதான இவர், பஞ்சாபி மரபுக் கலைகளில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். குறிப்பாக, சீக்கிய சமூகத்தின் பாரம்பரிய யுத்தக்கலை கட்காவைக் காட்சிப்படுத்துவதில் பெரும் ஈடுபாடு கொண்டவர். Gurpreet Singh ஜூலை 13, 2025 அன்று, சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தி வைத்து, கையில் பாரம்பரிய கூர்மையான வாள் போன்ற கண்டாயுடன் கட்கா கலைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அவரை ஆபத்தான … Read more

ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க செல்வதாக பேட்டி… வீடியோ

சென்னை: தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு  செல்வதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க  ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஜெர்மனி புறப்பட்டார்.  இதையடுத்து இங்கிலாந்து செல்லும் முதல்வர் அங்குள்ள  பிரபலமான   Oxford பல்கலைக்கழகத்தில்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், அதற்கு … Read more

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 250cc என்ஜின் பெற்ற ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 என இரு மாடல்களில் பின்புற பிரேக்கிங் அசெம்பிளியில் ஏற்பட்டுள்ள கோளாறினை இலவசமாக சரி செய்து தர நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 5,145 பைக்குகளை திரும்ப அழைக்கின்றது. பிப்ரவரி 2022 முதல் ஜூன் 2025 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 5,145 பைக்குகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. Gixxer 250 மற்றும் Gixxer SF 250-ல் V-Strom 250 க்கான பின்புற பிரேக் … Read more

“எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும்'' – செல்லூர் ராஜூ

“எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டினால் போதுமானது” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பிரசார வாகனத்தை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர். அண்ணாமலை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது:“மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் … Read more

அரசு ஊழியர்கள் ‘ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட்’ கிடையாது! தமிழ்நாடு அரசு

சென்னை:  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது, அதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை உயர்நீதிமன்றம்,  அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என கூறி, அதை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு  அறிவுறுத்தி இருந்தது. மேலும்,  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது, ஊழியர்களுக்கு … Read more