எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி – கொளத்தூர் வந்தாலே புத்துணர்ச்சி! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே எனக்கு புத்துணர்ச்சி வந்து விடுகிறது என கூறிய முதல்வர் ஸ்டாலின்,  எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவிதான்  என்றவர், கொளத்தூர் தொகுதியை பார்க்கும் போது அமைச்சர்களுக்கே பொறாமை  வந்துவிடும் என்றார். “கொளத்தூர் என்று சொன்னாலே அது ‘சாதனை’, இல்லையென்றால் ‘ஸ்டாலின்’ என்று நினைவுக்குவரும் அளவுக்கு இந்த தொகுதியில் இரண்டறக் கலந்திருக்கிறேன்  என  நெகிழ்ச்சியுடன் கூறினார். கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த பிறகு முதல்வர் … Read more

‘இஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்’ – ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் கருத்து

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் சாண்ட் கபீர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசாபலே கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- “இஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வதால் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? அவர்கள் மசூதிக்கு செல்வதை யாரும் தடுக்கப்போவதில்லை. நமது இந்து மதம் உன்னதமானது. அது அனைவரையும் உள்ளடக்கியது. சூரிய நமஸ்காரம் என்பது யோகாசன முத்திரைகளை கொண்ட, விஞ்ஞானப்பூர்வமான மற்றும் … Read more

"GSDP 16% வளர்ச்சியை ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில்தான் தமிழ்நாடு பெற்றுள்ளது" – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, 174 பயனாளிகளுக்கு மொத்தம் ₹1 கோடியே 99 இலட்சத்து 89 ஆயிரத்து 492 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய தங்கம் தென்னரசு, “திராவிட மாடல் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல், சமுதாயத்தின் பல்வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் – குறிப்பாக ஏழை, எளிய மக்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் … Read more

100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி! வீடியோ

டெல்லி: மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளகாத்தில், எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாதைகளுடன் பேரணி நடத்தினர். இந்தப பேரணியில்  காங்கிரஸ், திமுக உள்பட ஏராளமான எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்த்தின் பெயரை விக்சித் பாரத் ஜீ ராம் ஜீ என பெயர் மாற்றம் செய்துள்ள மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உள்ளதுடன், இதற்கான கூலியில், … Read more

‘தீய சக்தி திமுக’வுக்கும், ‘தூய சக்தி தவெக’வுக்கும்தான் போட்டி! ஈரோட்டில் விஜய் ஆவேச பேச்சு…

ஈரோடு: ‘தீய சக்தி திமுக’வுக்கும், ‘தூயசக்தி தவெக’வுக்கும்தான் போட்டி  என ஈரோட்டில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார். அவது உரையின்போது,  எம்.ஜி.ஆரும் மேடம் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி தி.மு.க-வை காலி பண்ணாங்க.. ஏன் இவங்க இப்படி பயங்கரமா திட்டுறாங்கனு நான் கூட யோசிப்பேன். ஆனா இப்பதான புரியுது. நானும் அவங்க சொன்னதையே நானும் இப்போ ரிபீட் பண்றேன். திமுக ஒரு தீயசக்தி.. … Read more

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.! | Automobile Tamilan

இந்தியாவில் 2026 ஆம் ஆண்டில் டெக்டான் வெளியிடப்பட உள்ள நிலையில் அடுத்த மாடலாக நிசானின் புதிய எம்பிவி காரான கிராவைட் 7 இருக்கையுடன் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. இன்று பெயர் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது ஏற்கனவே சந்தையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையாக இருந்தாலும், நிசானுக்கே உரிய தனித்துவமான அம்சங்களுடன் வரவுள்ளது. Nissan Gravite ட்ரைபர் மாடலில் உள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற உள்ள புதிய கிராவைட் 72hp பவரை … Read more

குக்கிராமத்தில் 3 மாதங்களில் 27397 குழந்தைகள் பிறப்பு? – சைபர் கிரிமினல்கள் செயலால் அதிர்ச்சி!

சைபர் கிரிமினல்களால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்து வருகின்றனர். அவர்கள் இப்போது அரசாங்கத்திற்கும் சவால் விடும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள செந்துர்சனி என்ற கிராமத்தில் புது வகையான ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மொத்தமே 1500 பேர்தான் வசிக்கின்றனர். ஆனால் இக்கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை மூன்று மாதத்தில் 27397 குழந்தைகள் பிறந்திருப்பதாக மக்கள் பிறப்பு பதிவு சாப்ட்வேரில் பதிவாகி இருக்கிறது. … Read more

கட்சியில் இருந்து நீக்கம்? ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பினார் பாமக தலைவர் அன்புமணி…

சென்னை: பாமக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில்,  பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கும் வகையில், பாமக தலைவராக உள்ள அன்புமணி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜிகேமணி  கட்சி விரோத செயல்பாடுகளில்  தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அவரை  பாமகவில் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக் கோரி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாமகவை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு உச்சமடைந்துள்ளது.  … Read more