பாலஸ்தீன அதிபரின்  விசாவை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

வாஷிங்டன்: ஐ.நா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் பங்கேற்பதை தடுக்கும் வகையில், அவரது விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஐ.நா. பொதுச் சபையின் (UNGA 80) 80வது அமர்வு செப்டம்பர் 9, 2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும். உயர்மட்ட பொது விவாதத்தின் முதல் நாள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்க இருப்பதாக … Read more

7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சமஸ்கிருத ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்த 36 வயது சமஸ்கிருத ஆசிரியர் மீது, அதே பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் தங்கள் புகாரை தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் இது குறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சமஸ்கிருத ஆசிரியர் பள்ளியில் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை … Read more

Judiciary: “நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' – இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார். பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 27, 2025 அன்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அதனை ஏற்று, ஆகஸ்ட் 29, 2025 அன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். ஆனால், இவருக்கு முன்பு பதவி வழங்கப்பட வேண்டிய மூத்த பெண் நீதிபதிகள் இருந்தபோதும் ஏன் … Read more

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்…

கெய்ரோ: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்  வெளியாகி உள்ளது. “ஏமனில் உள்ள சனா பகுதியில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் இராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக” இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலில்   ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஹவுதிகள் இன்று … Read more

எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவது இல்லை: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவது இல்லை. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. நிரந்தர நலன் மட்டுமே உள்ளது. உலகம் புதிய சவால்களுடன் வெகு வேகமாக மாறி வருகிறது. சுயசார்பு என்பது விருப்பமல்ல, தேவையானதாக மாறிவிட்டது … Read more

Ather Rizta updated – ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

பிரபலமான ஏதெர் ரிஸ்டா ஃபேம்லி ஸ்கூட்டரின் Z வேரியண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு OTA மூலம் தொடுதிரை வசதி மற்றும் டெர்ராகோட்டா சிவப்பு என்ற நிறம் ஒற்றை மற்றும் டூயல் டோன் என இரு விதமாக கிடைக்கின்றது. இன்றைய ஏதெரின் கம்யூனிட்டி தினத்தில் EL platform உட்பட EL01, Redux என்ற இரு கான்செப்ட்களுடன் கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் விரைவு சார்ஜரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரிஸ்டா இசட் வேரியண்டை ஏற்கனவே வைத்துள்ள வாடிக்கையாளர்கள் முழு தொடுதிரை … Read more

“நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நலன்களே நிரந்தரம்'' – ராஜ்நாத் சிங்

என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாடு 2025 நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:“இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் தற்சார்பு (ஆத்மநிர்பர்தா) மிகவும் முக்கியமானது. நிரந்தர நண்பர்களோ எதிரிகளோ இல்லை; நிரந்தர நலன்களே உள்ளன. உள்நாட்டிலேயே பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் ஐ.என்.எஸ். ஹிம்கிரி மற்றும் ஐ.என்.எஸ். உதய்கிரி … Read more

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு…

சென்னை:  சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய   தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என நீதிமன்றத்தில் தொரிவித்து உள்ளது. இந்த வழக்கில், தூய்மை பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து,  இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் … Read more

வேறு சாதி ஆணுடன் காதல்… மகளின் கழுத்தை நெரித்துக் கொன்று வாயில் விஷத்தை ஊற்றிய தந்தை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி பகுதியில் உள்ள மேலகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். கடந்த வியாழக்கிழமை சங்கரின் 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து சங்கரின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், இது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கரின் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான … Read more