இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 125-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பருவமழையை குறிப்பிட்டு அவர் பேசும்போது, இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. வீடுகளை சேதப்படுத்தி விட்டன. வயல்வெளிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. குடும்பங்கள் மொத்தமும் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறினார். கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் … Read more

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை கூடுதலாக அமைந்திருந்தது, ஆனால் காலம் மாற துவங்கியதனால் சவாலான விலையில் அதிக ரேஞ்ச் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் தாண்டி பொதுவான 30கிமீ முதல் 60 கிமீ தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் சார்ஜிங் மேம்பாடு எனவும் சாத்தியமாகி உள்ளதால் ரூ.1,00,000 குறைந்த அல்லது சில ஆயிரங்கள் கூடுதலாக விலை கொடுத்தாலும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்ய மிக தீவரமாக பலதரப்பட்ட பயனாளர்கள், விற்பனை எண்ணிக்கை, ஆன்லைன் … Read more

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் டி.ஜி.பி, பணியில் எந்தவித சார்ஜிம் இருக்கக் கூடாது போன்ற அடிப்படை தகுதிகள் உள்ளன. அதோடு ஆளுங்கட்சியின் ஆசியும் பெற்றவராக இருக்க வேண்டும். தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு ஓய்வு பெறுவதையடுத்து அடுத்த … Read more

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடெல்லி, டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்தூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வலது பக்கம் உள்ள என்ஜினில் தீ பற்றும் அறிகுறிகள் தென்பட்டதால், விமானி அறையில் அலாரம் ஒலித்தது. இதையடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு விமானி தகவல் கொடுத்தார். அதிகாரிகள் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்ததும், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். பயணிகளுக்கு தங்குமிடம் … Read more

தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி

தமிழகத்தின் இயற்கை வளமான ஆறுகள் ஒருபுறம் கொள்ளை போகிறதென்றால் மறுபுறம் மலைகளைக் குடைந்து கற்களை வெட்டிக் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேனியில் மலைகளை வெட்டும் சம்பவம் ஜரூராக நடந்து வருகிறது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அருகே உள்ள சங்கிலி கரடு பகுதியில், மகளிர் சுயஉதவிக் குழுவின் பெயரில் கல்குவாரி அரசின் அனுமதியுடன் செயல்பட்டு வந்தது. பெயர்தான் மகளிர் சுயஉதவிக் குழு. ஆனால் வெட்டி எடுத்ததோ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அனைத்து அரசியல் … Read more

`திருமண பேச்சுவார்த்தை நடத்தலாம் வா…' – மகளின் காதலனை தனி அறையில் அடித்துக் கொன்ற தந்தை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பிம்ப்ரியில் இருக்கும் சங்க்வி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ரமேஸ்வர்(26). இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெண்ணின் வீட்டாரிடம் பேசியபோது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். ரமேஸ்வர் மீது பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் சில கிரிமினல் வழக்குகளும் ரமேஸ்வர் மீது இருப்பதை சுட்டிக்காட்டி அவர்களது … Read more

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பு’ என்கிறார் வெதர்மேன் பிரதீப் ஜான்…

சென்னை: சென்னையில்  நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பால்’  உருவானது என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இந்த மேகவெடிப்பு   நடப்பாண்டு முதன்முறையாக சென்னையில் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 ஆகஸ்டு மாதம், சென்னைக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாதம் எனறு குறிப்பிட்டுள்ளதுடன், ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 3 மி.மீ முதல் அதிகபட்சமாக ரூ. 100 மிமீட்டர் வரை மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேக வெடிப்பு என்றால் … Read more

"பாகுபலி போன்ற வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை; எனக்குப் பிடித்த ஹாலிவுட் படங்கள் இவைதான்"-நாகர்ஜுனா

தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் அக்கினேனி நாகர்ஜுனா. தமிழில் நாகர்ஜுனா என்றாலே முதலில் ஞாபகம் வருவது ‘சோனியா சோனியா’, ‘சந்திரனைத் தொட்டது’ பாடல்கள்தான். இந்த இரண்டு பாடலிலேயே தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துவிட்டார். நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சியான தெலுங்கு பிக்பாஸின் தொகுப்பாளராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து ஸ்டைலிஸான வில்லனாக ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். கூலி படத்தில் நாகார்ஜுனா Nagarjuna: `தள்ளிவிடப்பட்ட ரசிகர்!’ மன்னிப்புக் கேட்டு பதிவிட்ட … Read more

பிரதமர் மோடி பயணத்தில் ஒப்பந்தம்: இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!

டெல்லி: பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறுகிறது. சந்திரயான் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான, செமி கண்டக்டர் மற்றும்  கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது. இஸ்ரோவிற்கும் ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, “பூமியின் எல்லைகளுக்கு அப்பால் மற்றும் விண்வெளியில் மனிதகுலத்தின் முன்னேற்றத்தின் அடையாளமாக செயலில் … Read more

மாட்டிறைச்சி சாப்பிட தடைவிதித்த வங்கி ரீஜினல் மேலாளர்; `பீப் பெஸ்ட்' போராட்டம் நடத்திய அதிகாரிகள்!

கேரள மாநிலம் கொச்சியில் கனரா வங்கி ரீஜினல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. அங்கு சிறிய அளவிலான கேண்டீன் ஒன்று செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்காக செயல்படும் அந்த கேண்டீனில் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கப்படுவது வழக்கம். அந்த கேண்டீனில் மாட்டுக்கறி சமைக்கக் கூடாது எனவும், அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது எனவும் புதிதாக பதவியேற்ற ரீஜினல் மேலாளர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ரீஜினல் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடும் ‘பீப் பெஸ்ட்’ போராட்டம் … Read more