பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி

மும்பை, மராட்டிய மாநிலம் அகில்யாநகர் மாவட்டம் கார்ஜத் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சுதம் ராஜ்குமார் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ராஜ்குமார் நேற்று இரவு ரோஷின் பகுதியில் உள்ள சாலையில் சக போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, சாலையில் வேகமாக வந்த வாகனம் ராஜ்குமார் மீது மோதிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளது. வாகனம் மோதியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜ்குமார் மீது … Read more

பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் இன்று. இதையொட்டி,  கொள்கை ஆசான் பேராசிரியர் க.அன்பழகன்  என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த க.அன்பழகனின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில்  அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கழகம் எனும் … Read more

சத்தீஷ்கார்: யானை தாக்கி இளைஞர் பலி

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கர்பா மாவட்டம் கவுபரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் மகேந்திர சிங் (வயது 35). இவர் இன்று காலை தனது வீட்டிற்கு வெளியே தீ மூட்டி அதன் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை மகேந்திர சிங்கை தாக்கியது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து சென்று மகேந்திர சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித் துறை!

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், 10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை  பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. மேலும்,ஏற்கனவே அறிவித்தபடி,  11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் செய்முறைத் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச … Read more

ரியல் எஸ்டேட் ஏஜென்ட் கொலை: தலைமறைவாக இருந்த தம்பதி 16 ஆண்டுகளுக்குப்பின் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியில் கடந்த ஏப்ரல் 2009ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டார். பண விவகாரத்தில் நடந்த இந்த கொலையில் தர்மேந்திர ராமசங்கர் (வயது 54), அவரது மனைவி சோனு (வயது 50) உள்பட 4 பேருக்கு தொடர்பு இருந்தது. கொலையாளிகள் 4 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த … Read more

SIR: 'திமுக-வின் கனவு மண்ணோடு மண்ணாக போனது..!'- வெளியான வாக்காளர் பட்டியல் குறித்து இபிஎஸ் கருத்து

கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. SIR – பணி அதன் அடிப்படையிலான தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச.19) வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தவகையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

தமிழ்நாட்டில் 97.37 வாக்காளர்கள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒருமாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு இன்று மாலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியலில், தமிழ்நாடு முழுவதும்  மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.  தலைநகர் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன், முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மட்டும், 1,03,812 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. இது அதிர்வலைகளை … Read more

அரசு பேருந்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல் – இருவர் கைது

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் சோதனை சாவடி உள்ளது. இப்பகுதி தமிழக எல்லையில் உள்ளது. இந்த சோதனை சாவடியில் கலால் துறையினர், போலீசார் வாகன சோதனை நடத்தி, கடத்தி வரப்படும் போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வாளையார் சோதனை சாவடியில் கலால் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து கொட்டாரக்கரை நோக்கி கேரள அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை கலால் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் … Read more