நூதன போராட்டம்… உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் உலக நாடுகளின் ஆதரவை பெற நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. உக்ரைனின் டான்பாஸ் நகர் மீது ரஷ்ய துருப்புகள் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த நூதன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜெலென்ஸ்கி, உலக நாடுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் நாட்டின் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும் எனவும், அதில், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப கேளுங்கள் எனவும் … Read more

2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

புதுடெல்லி: இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். தமது பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் அவர், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதிக்க உள்ளார். அப்போது இரு நாடுகள் இடையே முக்கிய தொழில்களில் பெரிய முதலீடுகளை குறித்து அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலாவிடம் போலீசார் இன்று விசாரணை

கோவை : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 24-4-2017 அன்று காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி … Read more

ஏப்-21: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஏப்., 21: பெட்ரோல், டீசல் விலையில் 15 வது நாளாக மாற்றம் இல்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 15 வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று(ஏப்ரல்21) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ., 3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.அன்றைய தினம் மத்திய அரசு … Read more

அகத்தி கீரையின் அற்புத பயன்கள்

மருத்துவ குணங்ககள் நிறைந்த கீரைகளில் முதன்மையாக பார்க்கப்படுவது அகத்திக் கீரை. அதன் அற்புதமான பயன்கள் குறித்து இங்கு காண்போம். சத்துக்கள் அகத்திக் கீரையில் நீர்ச்சத்து 73 சதவீதம், புரதச்சத்து 8.4 சதவீதம், கொழுப்பு 1.4 சதவீதம், தாது உப்புக்கள் 2.1சதவீதம், நார்ச்சத்து 2.2 சதவீதம், மாவுச்சத்து 11.8 சதவீதம் உள்ளன. மேலும் சுண்ணாம்புச்சத்து, இக்கீரையில் அதிக அளவில் உள்ளதால், இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது. வைட்டமின் ஏ 100கி, … Read more

தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். தி.மு.கவின் 2006-2011-ம் ஆண்டு ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும் கருத்து பதிவிட்டுவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,231,561 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,231,561 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 506,771,320 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 458,871,518 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,699 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏப்ரலில் அதிகபட்சமாக 134 மி.மீ., பெய்த மழை| Dinamalar

பெங்களூரு:கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஏழு ஆண்டுகளில், ஏப்ரல் மாதத்தில் 134 மி.மீ., மழை பெய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இம்மாதத்தில் 41 மி.மீ., மழையே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கன மழையால், கடுமையான வெப்பத்தில் இருந்து பெங்களூரு நகரின் சாலைகள், வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. கோடை காலத்தில் மழை பெய்து வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிம்மதியை தந்த வேளையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து, சேதம் ஏற்படுத்தியது.இந்நிலையில் பெங்களூரிலுள்ள வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளதாவது:ஜே.பி.நகர், கோரமங்களா மற்றும் ஜெயநகர் உள்ளிட்ட … Read more

அது கட்டாயம்… இல்லையேல் கொல்லப்படுவார்கள்: உக்ரைன் நகர மக்களுக்கு ரஷ்யா அச்சுறுத்தல்

உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் தங்கள் உடைகளின் மீது கட்டாயம் வெள்ளை ரிப்பன்கள் அணிந்திருக்க வேண்டும் என ரஷ்ய துருப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை ரிப்பன்கள் அணியத்தவறும் மரியுபோல் நகர மக்கள் கொல்லப்படுவார்கள் எனவும் விளாடிமிர் புடினின் துருப்புகள் அச்சுறுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவ வீரர்கள் அணியும் வெள்ளை ரிப்பன்களை மரியுபோல் நகர மக்கள் அணிந்துகொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்கள் உக்ரைனிய ஸ்னைப்பர்கள் வசம் சிக்க வாய்ப்புள்ளதாகவும், இதன்பொருட்டு, மறைந்திருக்கும் … Read more