‘சினிமாவில் நடிக்க மாட்டேன்’- நடிகை ரோஜா பேட்டி

நகரி, ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி ஆனார். அப்போது 2½ ஆண்டுகளுக்கு பின்னர் மந்திரி சபை மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 25 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து புதிய மந்திரி சபை நேற்று பதவி ஏற்றுக்கொண்டது. மாநில தலைநகர் அமராவதியில் நடந்த விழாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 13 … Read more

கிழக்கு மொத்தமாக அழியும்… ரஷ்யாவின் அடுத்த நகர்வால் அச்சத்தில் உக்ரைன்

உக்ரைன் கிழக்கில் படைகளை குவித்து வரும் ரஷ்யா, கண்டிப்பாக தாக்குதலை முன்னெடுக்கும் எனவும், அது மிக விரைவில் நடக்கும் எனவும் அச்சம் எழுந்துள்ளது. ரஷ்யாவின் இந்த புதிய நகர்வு, உக்ரைன் கிழக்கை மொத்தமாக அழிக்கும் எனவும், அது மிக விரைவில் நடந்தேறும் எனவும் உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. உக்ரைன் தயார் நிலையில் இருப்பதாக கூறி வந்தாலும், இதுவரை எதிர்கொள்ளாத கடும் பின்னடைவை சந்திப்பார்கள் என்றே கூறப்படுகிறது. ரஷ்யா தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் அவர்கள் … Read more

போயிங் அதிகாரிகளுடன் | Dinamalar

வாஷிங்டன் : நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவைச் சேர்ந்த ‘போயிங்’ மற்றும் ஏவுகணை தயாரிக்கும் ‘ரேதியன்’ நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராஜ்நாத் சிங், போயிங் விமான நிறுவனம் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்கும் ரேதியன் நிறுவன உயரதிகாரிளுடன் பேச்சு நடத்தினார். இது குறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாஷிங்டனில், போயிங் மற்றும் ரேதியன் நிறுவன உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, ‘இந்தியாவில் … Read more

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 16-ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.  வரும் 14-ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15-ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால், 16-ம் தேதியும் (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார்.  இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்…ஒப்பந்த செவிலியர்களை பணி … Read more

பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா| Dinamalar

கொப்பால் : கார் மோதியதில், பைக்கில் சென்ற பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா கரடியின் தம்பி பசவராஜா அமரப்பா கரடி பலியானார்.கொப்பால் லோக்சபா தொகுதி பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா கரடி. இவரது சகோதரர் பசவராஜா அமரப்பா கரடி, 60. இவர், டணகனல் கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து, அருகே உள்ள ஹனுமனஹள்ளி கிராமத்துக்கு, பைக்கில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.எதிர் மார்க்கத்தில் வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் அமரப்பா பைக்குடன் துாக்கி … Read more

எரிசக்தி குறியீட்டு பட்டியல்; முதலிடம் பெற்றது குஜராத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-மாநிலங்களின் எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீட்டுக்கான நிடி ஆயோக் மதிப்பீட்டில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி திறன் மற்றும் பருவநிலை குறியீட்டு பட்டியலை, நிடி ஆயோக் வெளியிட்டு வருகிறது. இதன் முதல்கட்ட குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுத்தமான எரிசக்தி உற்பத்தி, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை, புதிய முயற்சிகள், எளிதாக கிடைப்பதற்கான வழிமுறைகள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இதில், குஜராத் மாநிலம் … Read more

ரஷ்ய படையெடுப்பு… ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மனைவியிடம் சொன்ன அந்த இரண்டு வார்த்தை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுத்த அந்த நாள், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது மனைவியிடம் கூறிய இரண்டு வார்த்தையை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது 40 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24ம் திகதி, உள்ளூர் நேரப்படி அதிகாலையில் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீரர்கள் உக்ரைனுக்குள் ஊடுருவினர். சம்பவத்தன்று, திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்கவே, திடுக்கிட்டு கண்விழித்ததாக கூறியுள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மனைவி Olena … Read more

மக்கள் சொல்படி நடப்பேன்: எம்.பி., சுமலதா அறிவிப்பு!| Dinamalar

பெங்களூரு, : ”மாண்டியா மாவட்டத்தின் அபிவிருத்தியே என் குறிக்கோள். மாவட்ட மக்கள் என்ன சொல்கின்றனரோ, அதன்படி நடப்பேன்,” என எம்.பி., – சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார்.மாண்டியா சுயேச்சை எம்.பி., -சுமலதா, முதல்வர் பசவராஜ் பொம்மையை, நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் சுமலதா கூறியதாவது:நான் எந்த கட்சியில் சேர வேண்டுமென்பதை, நான் முடிவு செய்ய முடியாது. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும்படி கூறியதால், நான் போட்டியிட்டேன்.என் மகன் அபிஷேக்கை தேர்தலில் களமிறக்கும்படி … Read more

SRH vs GT: வில்லியம்சன் ஸ்கெட்ச்; ஃபார்முக்குத் திரும்பும் சன்ரைசர்ஸ்; குஜராத்தின் முதல் தோல்வி!

முரட்டுத்தனமாக ஆடி அடுத்தடுத்து வெற்றிகளை மட்டுமே பெற்று பீஸ்ட் மோடில் சென்று கொண்டிருந்த குஜராத் அணி ஒரு புல் தடுக்கி விழுந்ததை போன்று சன்ரைசர்ஸ் அணியிடம் வீழ்ந்திருக்கிறது. ஒரு காலத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்கிற வரலாற்றையே மறந்துவிட்டு கோக்குமாக்காக ஆடிக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணி மீண்டும் பழைய ஃபார்மிற்குத் திரும்புவதற்கான அறிகுறியை வெளிக்காட்டியிருக்கிறது. கடந்த போட்டியில் சென்னையை வீழ்த்திய நிலையில் இந்தப் போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. வில்லியம்சன்தான் டாஸை வென்றிருந்தார். … Read more

முக்கிய அரசியல் தலைவருடன் விபத்துக்குள்ளான விமானம்: ரஷ்யாவின் கொடூர முகம் அம்பலம்

போலந்து முன்னாள் ஜனாதிபதி உட்பட 96 பேர் கொல்லப்பட்ட விமான விபத்திற்கு முதன்மை காரணம் ரஷ்யா என்பது, விரிவான விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த 2010ல் நடந்த விமான விபத்து தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுத்துள்ள போலந்து நிர்வாகம், பல முக்கிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளது. மேலும், விமானத்தினுள் வெடிப்பொருட்களை மறைத்து வைத்து, திட்டமிட்டே வெடிக்க வைத்துள்ளதும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. தொடர்புடைய விமான விபத்தில் போலந்தின் முன்னாள் ஜனாதிபதி Lech Kaczynski, அவரது மனைவி மற்றும் 94 அரசியல் … Read more