பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா| Dinamalar

கொப்பால் : கார் மோதியதில், பைக்கில் சென்ற பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா கரடியின் தம்பி பசவராஜா அமரப்பா கரடி பலியானார்.கொப்பால் லோக்சபா தொகுதி பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா கரடி. இவரது சகோதரர் பசவராஜா அமரப்பா கரடி, 60. இவர், டணகனல் கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து, அருகே உள்ள ஹனுமனஹள்ளி கிராமத்துக்கு, பைக்கில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.எதிர் மார்க்கத்தில் வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் அமரப்பா பைக்குடன் துாக்கி வீசப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இறந்தவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.தம்பி இறந்த தகவலறிந்த எம்.பி., சங்கண்ணா கரடி, டில்லியில் இருந்து சொந்த கிராமத்துக்கு வந்து இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் சோகமாக பங்கேற்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.