விடுதியில் அசைவ உணவு நிறுத்தம்: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே கடுமையான மோதல்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதி கேண்டீனில் இறைச்சி பரிமாறப்பட்டது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவேரி விடுதியில் மதியம் 3:30 மணியளவில் ராம நவமி அன்று இறைச்சி பரிமாறப்பட்டதற்கு எதிராக எழுந்த தகராறில் இரண்டு மாணவர்கள் குழுக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கியதில் 6 மாணவர்கள் வரை காயமடைந்துள்ளனர். பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் தான், … Read more

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

சென்னை: 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 18, 19 தேதிகள் நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 21ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான … Read more

விலைவாசி உயர்வு குறித்து விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் காங். பெண் தலைவர் வாக்குவாதம்

புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.கவுகாத்தியை அடைந்தவுடன், பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி இரானியிடம் அதே விமானத்தில் பயணித்த, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா வந்தார். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து இரானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிரிதி … Read more

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்…முதல் சுற்று முடிவுகள் அறிவிப்பு: 2ம் சுற்று தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பு!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு போட்டியில் இம்மானுவேல் மக்ரோனை எதிர்த்து மரைன் லு பென் போட்டியிடவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் 24ம் திகதி நடைபெற உள்ள இரண்டாம் சுற்று தேர்தல் வாக்குப்பதிவில் தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தீவிர வலதுசாரி கொள்கையாளரான மரைன் லு பென்னை எதிர்கொள்ள இருக்கிறார். ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் சுற்று போட்டியில் ஐந்திற்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் … Read more

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில்

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் திருச்சுழி சாலையில் சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் செங்காட்டிருக்கை இடத்துவளி என்றழைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நகரத்தின் கிழக்கில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் என்னும் சிவன் கோயிலில் உள்ள பிற்காலபாண்டியர் கல்வெட்டுகள் இவ்வூரின் வணிக முக்கியத்துவத்தை விளக்குவதாயுள்ளன. முதலாம் சடையவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில் அவனது இளவல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் முற்றுப்பெற்றது. இச்சிவன் கோயிலின் சுவரில் 12 கல்வெட்டுகளும், … Read more

ஏப்-11: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சீரடி மகாராஜா கோவிலில் | Dinamalar

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் சீரடி மகாராஜா சாய் கோவிலில் ராம நவமி விழா நடந்தது. ரெட்டியார்பாளையம் புதிய பைபாஸ் ரோட்டில், சீரடி மகாராஜா சாய் அமைந்துள்ளது. இக் கோவிலில் ராம நவமி விழா நேற்று காலை 7.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 8.௦௦ மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10.௦௦ மணிக்கு சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம் நடந்தது. 11.௦௦ மணிக்கு பல்லக்கு உற்சவம், 12.௦௦ மணிக்கு ஆரத்தி, மதியம் 1.௦௦ மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 8.30 மணிக்கு … Read more

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 12-ந்தேதி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் … Read more

வெடித்து சிதறிய உக்ரைனின் மைகோலைவ் நகரம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ ஆதாரம்!

உக்ரைனின் தெற்கு பகுதி நகரான மைகோலைவ் மிகப்பெரிய தாக்குதல் வெடிப்பு நிகழ்ந்து இருக்கும் நிலையில் அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அச்சத்தில் அனைவரையும் உறைய வைத்துள்ளது. நான்கு கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ள போதிலும் உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து 6வது வாரமாக தாக்குதல் நடத்திவருகிறது. உக்ரைனின் மேற்கு பகுதி நகரங்களான தலைநகர் கீவ், மரியுபோல் மற்றும் கார்க்கிவ் ஆகிய பகுதிகளில் இருந்து பெரும்பாலான ரஷ்ய படைகள் பின்னெடுக்கப்பட்டு உக்ரைனின் கிழக்கு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,202,915 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,202,915 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 498,964,606 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 448,172,647 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 53,718 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.