தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. துறை அமைச்சர் வேலு, விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,205,402 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,205,402 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 499,633,941 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 449,411,324 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,924 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமலை ஏழுமலையானுக்கு வெளிநாட்டில் நிலம் நன்கொடை| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியாவில் உள்ள, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 4 ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்ஸில் குடியேறிய வெளிநாட்டு வாழ் இந்தியரான ராமகிருஷ்ண பிள்ளை, அந்நாட்டின் தலைநகரான விக்டோரியாவில் உள்ள, 4 ஏக்கர் நிலத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். ஆப்ரிக்கர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சீஷெல்ஸ் நகரில் ஹிந்துக்கள் அதிக அளவில் உள்ளனர். அங்கு ஏற்கனவே விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. … Read more

ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது – சரத்பவார்

மும்பை,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அமராவதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-  மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலமும், மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலமும், தலைவர்களுக்கு எதிரான விசாரணையை நடத்துவது மூலமும், ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை தேசியவாத காங்கிரஸ் முறியடித்து, அதற்கு எதிராக முழு பலத்துடன் போராடும். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய … Read more

தகன உபகரணங்களுடன் ரஷ்ய துருப்புகள்: உக்ரைன் நகர மேயர் வெளியிட்ட பகீர் தகவல்

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய தாக்குதலுக்கு 10,000கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர மேயர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை 40 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. மேலும், கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் தற்போது இராணுவத்தை குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், துறைமுக நகரமான மரியுபோல் மேயர் வெளியிட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மரியுபோல் நகரில் மட்டும் 10,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாகவும், மொத்தம் கொல்லப்பட்டவர்கள் … Read more

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னை இன்று பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகள், டீசல் விலை 100 ரூபாய் 94 காசுகள் என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி தொடர்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் … Read more

ஏப்-12: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு| Dinamalar

சான் பிரான்சிஸ்கோ : டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சேர விருப்பமில்லை என அறிவித்துள்ளார்.சமீபத்தில், எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின், 9 சதவீத பங்குகளை வாங்கி, அதன் இயக்குனர் குழுவில் சேர உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பரக் அகர்வால், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 9ம் தேதி, எலான் மஸ்க் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இணைவதாக இருந்தது. ஆனால், திடீரென அவர் அதில் … Read more

மத பேரணி மீது கல்லெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களில் வீடுகள் புல்டோசர் மூலம் இடிப்பு

போபால், வட இந்தியாவில் இந்து மதத்தினரின் பண்டிகை ’ராம நவமி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களில் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.  அந்த வகையில், மத்தியபிரதேச மாநிலம் ஹர்ஹென் மாவட்டத்தில் ராமநவமி பண்டிகையான நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். அப்போது, மதப்பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. வீடுகளின் மேல் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 போலீசார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து … Read more

கனவு நிறைவேறாமல் போனால்… பிரித்தானிய சேன்ஸலர் நாட்டைவிட்டு வெளியேறலாம்

பிரித்தானிய பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டால் சேன்ஸலர் ரிஷி சுனக் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா சென்றுவிடலாம் என அவரது நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியாவின் Santa Monica பகுதியில் 5.5 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான வீடு ஒன்று ரிஷி சுனக் பெயரில் உள்ளது. பிரித்தானியாவில் பிரதமராகும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தால், நாட்டைவிட்டு வெளியேறி Silicon Valley-ல் பணிக்கு செல்லவும் ரிஷி … Read more