300 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்.. டிசிஎஸ் காலாண்டு முடிவுகள்..!

அமெரிக்கா பணவீக்க தரவுகள், ஐரோப்பிய நாடுகளின் நாணய கொள்கை கூட்டம் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை மொத்தமும் சரிவுடன் திங்கட்கிழமை வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகிறது. Apr 11, 2022 10:29 AM வெரான்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் பங்குகள் NSE, BSE-யில் பட்டியலிடப்பட்டது Apr 11, 2022 10:28 … Read more

RR vs LSG: ஸ்டாய்னிஸை அடக்கிய அறிமுக பௌலர் குல்தீப்; டிரெண்டை மாற்றி அசத்தும் ராஜஸ்தான்!

நடந்துக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் சீசன் ‘பாட்டி வடை சுட்ட கதை’ க்கு சமமாக பெரிதாக சுவாரஸ்யமே இல்லாமல் சென்றதற்கு அணிகளின் அணுகுமுறையும் ஒரு காரணமாக இருந்தது. பனியின் தாக்கத்தைக் காரணம் காட்டி டாஸை வென்றவுடன் சேஸிங்க் செய்ய முடிவெடுத்து எத்தனை பெரிய ஸ்கோராக இருந்தாலும் அடித்து வெளுக்க வேண்டும். அப்படி சேஸ் செய்யும் அணிகள்தான் தொடர்ந்து வென்று கொண்டேவும் இருக்கின்றன. இந்த அலுத்துப்போன ட்ரெண்ட்டை மாற்றியிருக்கும் ஒரே அணி ராஜஸ்தான் ராயல்ஸ்தான். அந்த அணி வென்றிருக்கும் மூன்று … Read more

ஐபிஎல் போட்டியில் வேண்டுமென்றே ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய அஸ்வின்! வைரல் வீடியோ

ஐபிஎல் போட்டியில் பேட்டிங் விளையாடி கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஸ்வின் திடீரென களத்தில் இருந்து ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் நேற்று மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் ரிட்ட்யர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் ஐபிஎல்லில் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறும் முதல் வீரர் என்ற பெயருக்கு அவர் சொந்தக்காரர் … Read more

தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி எல்கேஜி படிப்புக்கு வரும் 20ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி எல்கேஜி படிப்புக்கு வரும் 20ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25சதவிகிதம் ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணாக்கர்களின் கல்வி கட்டணத்த அரசே செலுத்துகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான எல்கேஜி மாணாக்கர்கள்சேர்க்கை வரும் 10ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த கோட்டாவில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக தனியார் … Read more

பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்று புதுவையில் நடுக்கடலில் விஜய் பேனர்

புதுச்சேரி: நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் மாதம் அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் கடலுக்கு நடுவில் பேனர் வைத்து பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் 13-ந்தேதி வெளியாகிறது. திரைப்படத்தை வரவேற்று புதுவை நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும் விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்துள்ளனர். அந்த பேனர்களில் தங்களது விருப்பமான அரசியல் கட்சி தலைவர்களின் உருவப்படங்களை அதில் இடம் பெறச்செய்துள்ளனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறாக வைத்திருக்கும் பேனர்களை … Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 உயர்வு: சவரன் ரூ.39,400-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 உயர்ந்து சவரன் ரூ.39,400-ஐ தாண்டி விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,925-க்கும் சவரன் ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிளட் பிரஷர் தெரியும்; ஐ பிரஷர் தெரியுமா? – கண்கள் பத்திரம் – 10

ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் பிளட் பிரஷர் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி கண்களில் வரும் பிரஷர் ஒன்று இருப்பதை அறிவீர்களா? அதன் பெயர் `க்ளாக்கோமா’ (Glaucoma). அது என்ன செய்யும்… அறிகுறிகள் எப்படியிருக்கும்…. சிகிச்சைகள் தேவையா…? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். சிறப்பு மருத்துவர் வசுமதி அதென்ன க்ளாக்கோமா? கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே க்ளாக்கோமா. கண்ணின் முன்பகுதிக்குள் ஆக்குவஸ் ஹியூமர் (Aqueous humour) என்ற திரவம் … Read more

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இமானுவேல் மேக்ரான் முன்னிலை

பிரான்ஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தல், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இமானுவேல் மேக்ரான் முன்னிலை பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் 12-வது அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரன் 27.42 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி உள்ளார். ஆனால் அந்நாட்டு தேர்தல் முறைப்படி, முதல் சுற்றில் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் அதாவது 50 சதவீதம் வாக்குகள், யாரும் பெறவில்லை என்றால் இரண்டாம் கட்ட … Read more

கனமழை: நாகை, காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை : தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு … Read more

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று கல்வித்துறையின் மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள்  நடைபெறுகிறது.மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் முதல்வர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்படுகிறது.