பிரபல நடிகை ரோஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்த 2½ ஆண்டுகளுக்கு பிறகு சரியாக பணி செய்யாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி 24 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கினர். இந்நிலையில் நாளை காலை 11.31 மணிக்கு வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. இந்த நிலையில் நகரி தொகுதி எம்.எ.ஏவான ரோஜாவுக்கு அமைச்சர் … Read more

நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது- எம்.பி கனிமொழி

தூத்துக்குடி: நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது என்று எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பாராளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, “தமிழக அரசு எடுத்த உரிய நடவடிக்கை காரணமாக, நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் ஜனநாயக கடமையான … Read more

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. டெல்லி அணி வீரர்கள்: ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் … Read more

சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி பலி

நாகை: திருப்பூண்டி காரைநகர் அருகே சாலையோர வீட்டிற்குள் பேருந்து புகுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பும் அரசு பஸ்கள்| Dinamalar

தட்சிண கன்னடா : அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்படும் டீசல் மீதான மானியத்தை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, தனியார் பெட்ரோல் பங்க்களிலிருந்து கே.எ.ஸ்.ஆர்.டி.சி., பேருந்துகளில் டீசலை நிரப்ப துவங்கியுள்ளது.மத்திய அரசு டீசலுக்கு மானியம் வழங்கியபோது, கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை கிடைத்து வந்தது. இப்போது மானியம் ரத்து செய்யப்பட்டதால், ஒரு லிட்டர் டீசல் ரூ.107 ஆக உயர்ந்துள்ளது. இதுவே, தனியார் பெட்ரோல் பங்க்களில் ஒரு லிட்டர் டீசலுக்கு 94 … Read more

“இந்தி எதிர்ப்பு அகில இந்திய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது!" – கி.வீரமணி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் இந்தியில் மட்டுமே நடைபெறுகின்றன. அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும். அது இந்தியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு நாடு முழுவதும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் … Read more

உக்ரைன் மக்களின் கர்ஜனை நீங்கள்… ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்த போரிஸ்

உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மனதார புகழ்ந்துள்ளார். உக்ரைன் மக்கள் சிங்கம் என்றால், அதன் கர்ஜனை நீங்கள் என ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார் போரிஸ் ஜோன்சன். உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போரிஸ் ஜோன்சன், விளாடிமிர் புடினின் துருப்புகளை விரட்டியடிக்க 120 கவச வாகனங்கள் மற்றும் புதிய கப்பல் தடுப்பு ஏவுகணை அமைப்புகளையும் உக்ரைனுக்கு அளிக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார். இரு தலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்து, உக்ரைனின் … Read more

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு

சென்னை: இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து பிரபல மென்பொருள் நிறுவனங்களிடம் தமிழ் இணைய கல்வி கழகம் விருப்பம் கோரியுள்ளது. தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் தமிழ் புகைப்படங்கள் மற்றும் பேச்சு அங்கீகாரத்திற்கான பிரத்தியேக மென்பொருள் … Read more

திருச்செந்தூர் கோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர்: முதல்-அமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தரமான திருநீறு, குங்குமம் பிரசாதம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி ரூ. 3 கோடி செலவில் பழனி பால தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட 4 கோவில்களில் திருநீறு தயாரிக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 4 கோவில்களில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கோவில்களில் தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமம் … Read more

செஸ் ஒலிம்பியாட்டில் இளையராஜா இசை நிகழ்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடந்தது. போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை மாதம் நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் இசையசைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர் என்றார்.