தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது

தாம்பரம்: சென்னையை அடுத்த தாம்பரம் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆகும். இப்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 56 வார்டுகளில் வெற்றி பெற்றது. 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்தது. இதனால் தி.மு.க.வை சேர்ந்த வசந்தகுமாரி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையொட்டி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மன்ற கூட்டம் நாளை காலை (திங்கள்கிழமை) 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு 171 … Read more

ரயில் மோதி யானைகள் இறக்கும் விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு

கோவை: ரயில் மோதி யானைகள் இறக்கும் விவகாரம் தொடர்பாக கோவையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

"ஒட்டகப் பால் காமெடில வடிவேலுவின் டிப்ஸ்; அவன யாரு ஷோ பண்ண சொன்னா என்ற கவுண்டமணி" – சௌந்தர் ஷேர்ஸ்!

`ஒட்டகப் பால்’ என்று சொன்னவுடன் உடனே நம் நினைவுக்கு வரும் முகம் இவருடையதாகதான் இருக்கும். வடிவேலு கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் சௌந்தர் அவரது திரை வாழ்க்கை குறித்து அளித்த சிறப்பு நேர்காணல் இதோ, வெற்றிக்கொடி கட்டு படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நீங்கள் நடித்த ஒட்டக காமெடி முகநூல் மீம்களிலும், நகைச்சுவை சேனல்களிலும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அந்தக் காமெடி எப்படி … Read more

இது ஒரு ரகசிய விளையாட்டு! பிரித்தானியாவில் 9 ஆண்டுகளாக சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி பின்னணி

பிரித்தானியாவில் சிறுமிகளை தனிமையான வீட்டில் அடைத்து வைத்து 9 ஆண்டுகளாக சீரழித்த கொடூரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Nottinghamshire-ஐ சேர்ந்த மேத்யூ இலிஸ் என்ற 35 வயதான நபர் ஒரு வீட்டில் சிறுமிகளை அடைத்து வைத்து 9 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் யாரும் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி வைத்திருக்கிறார். மற்றும் இது ஒரு ரகசிய விளையாட்டு என அவர்களை ஏமாற்றியிருக்கிறார். ஒரு கட்டத்தில் மேத்யூவால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் … Read more

மோகன் ஜி – செல்வராகவனுடன் நட்டியும் இணைந்தார்!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய அதிரடி படங்களின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன் ஜி. அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் புதிய பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில், இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகர் நட்டி இந்த படத்தில் இணைந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கிறது. “மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய … Read more

கல்லூரி தேர்வு கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்“ என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் 2 மடங்கு, 3 மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து தற்போது தான் ஓரளவு இயல்பு நிலை … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணிக்கு நடந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணிக்கு நடந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. 2.13 லட்சம் பேர் எழுதிய தேர்வின் உத்தேச விடைகள் www.trp.t.nic.in இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நள்ளிரவு வரை பார்ட்டி சி.சி.பி., போலீசார் அதிரடி| Dinamalar

மாரத்தஹள்ளி : நள்ளிரவு வரை பார்ட்டி நடத்திய, சொகுசு ஓட்டலில் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டு, இளம்பெண்கள் உட்பட பலரை கைது செய்தனர்.பெங்களூரு மாரத்தஹள்ளியின், வெளிவட்ட சாலையில் சொகுசு ஓட்டல் உள்ளது. இங்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நபர், பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவை கடந்தும், பார்ட்டி தொடர்ந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் சி.சி.பி., போலீசார், ஓட்டலுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது … Read more

பழநி முருகன் கோயில்: `2-வது புதிய ரோப் கார்'; விரைவில் கும்பாபிஷேகம்; – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த 2 கோயில்களிலும் கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகளாகிறது. தற்போது இந்தக் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாகவும், பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகப் பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இந்து சமய அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் … Read more

சர்ச்சைக்குரிய LBW முறையில் அவுட்டான கோலி! பேட்டை கோபத்தில் தரையில் அடித்த வீடியோ

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ முடிவிற்குப் பிறகு ஆர்.சி.பி வீரர் விராட் கோலி கோபத்துடன் வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றியை நெருங்கும் தருணத்தில் 48 ரன்களில் விளையாடி கொண்டிருந்த விராட் கோலி சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ பந்தில் அவுட்டானார். my god😭 he’s so angry … Read more