கடலூர் மருத்துவ மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: கடலூர் மருத்துவ மாணவர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடத்தினர். 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு, கோத்தபய அரசின் திறமையின்மையே காரணம்- ரணில் விக்கிரமசிங்கே புகார்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதுடன், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, 2019 ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த போது  இலங்கை பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.  தாம் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது உபரி நிதி போதுமான அளவில் இருந்ததாக … Read more

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நில அதிர்வு

அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவு கேம்பெல் வளைகுடா பகுதியில் இருந்து 70.கிமீ தொலைவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மாலை 4.23 மணியளவில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 4.6-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தை கடப்பதை தடுக்க ரயில்வே துறை விழிப்புணர்வு| Dinamalar

பெங்களூரு : பொது மக்கள் கவனக்குறைவாக, தண்டவாளங்களை கடப்பதை தடுக்க, தென் மேற்கு ரயில்வே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.இது குறித்து, தென் மேற்கு ரயில்வே பிரிவு முதன்மை நிர்வாகி சஞ்சீவ் கிஷோர் கூறியதாவது:ரயில் தண்டவாளங்களை தாண்டும் போது, ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பெங்களூரின் சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம், ஹூப்பள்ளியின் சித்தரூட ரயில் நிலையம், மைசூரு ரயில் நிலையத்தில் பெரிய பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் கையெழுத்திடுவதன் மூலம், ‘ரயில் தண்டவாளத்தை தாண்டுவதில்லை. தண்டவாளம் அருகில் … Read more

“ஊழல் செய்து நாட்டை சீரழித்துவிட்டனர்; இனி இலங்கை மீள்வதற்கு வழியேயில்லை!" – அகதிகள் கண்ணீர்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் அரிசி , கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவித்துவரும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு புலம்பெயர்பவர்களில் அதிகமானோர் தமிழகத்திற்குதான் வருகின்றனர். அதன்படி இலங்கையிலிருந்து ஏற்கெனவே தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு வந்த 20 பேர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்குள் அகதிகளாக நுழைவதை தடுத்து … Read more

பாகிஸ்தானில் கவிழ்ந்த அரசு… இம்ரான்கானை காலி செய்த மூன்று பேர்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தோல்வியடைந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு வலிமையற்ற கூட்டணி உருவாக்கப்பட்டு இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அவரை பிரதமர் பதவியை விட்டு விலக வைத்துள்ளனர். இம்ரான்கான் பதவி விலகுவதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த மூன்று தலைவர்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தான் பிரதமராக மூன்று முறை பதவி … Read more

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது .

மதுரையில் சித்திரை திருவிழா: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

மதுரை: தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் சித்திரை திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக புகழ் பெற்ற சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது. தற்போது கொரோனா விதிகள் முடிவுக்கு வந்ததால் இந்த ஆண்டு சித்திரை திருவிழா பக்தர்கள் … Read more

தாளவாடியில் நாளை வணிகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்

ஈரோடு: தாளவாடியில் நாளை கடைகளை அடைத்து போராட்டம் நடத்த வணிகர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்| Dinamalar

புதுடில்லி-‘தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’ என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ‘கட்சிகளின் அறிவிப்புகள் சாத்தியமா என்பது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்’ என, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.தேர்தல் நேரத்தின்போது, மக்கள் வரிப் பணத்தில் இருந்து செலவிடும் வகையில், இலவச அறிவிப்புகள் வெளியிடுவது, இலவச பொருட்கள் தருவது போன்ற, அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற … Read more