CSK vs SRH: வானம் தொட்டுப் போனா… தொடர்ந்து 4 தோல்விகள்; 2020-ன் ரிப்பீட் மோடில் சென்னை?

ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த முறை 33% பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என ஆரம்பக்கட்ட முடிவுகள் சொல்கின்றன. பத்து அணிகள், குறைவான காலத்துக்குள்ளேயே அடுத்த ஐபிஎல் தொடர்; அதிகமான லீக் போட்டிகள் என நிறைய காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும், கண் எதிரே பளீரென தெரியும் காரணம் சென்னை, மும்பை அணிகளின் தொடர் தோல்விகள்தான். மற்ற அணிகளைவிட எப்போதும் சென்னை போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் அதிகம். ரசிகர்கள் எண்ணிகையிலும் சென்னையும், மும்பையும்தான் டாப்பர்கள். ஆனாலும் இப்படி இரண்டு அணிகளும் … Read more

இலங்கையில் சற்று அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் (08-04-2022)

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (08-04-2022) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 578,613.00ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,410.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,950.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,710.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 149,700.00 21 கரட் … Read more

இரும்பு மனிதர் பினராயி விஜயன் – தோழர்களுக்கு செவ்வணக்கம்! கேரள கம்யூனிஸ்டு மாநாட்டில் மலையாளத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்…

கண்ணூர்: “இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்புமனிதராக பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார்” என கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23ஆவது அகில இந்திய மாநாட்டில் மலையாளத்தில்  உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் முதலில்,  தோழமை உணர்வோடு என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பளித்த தோழர்களுக்குச் செவ்வணக்கம் தெரிவித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 23-வது தேசிய மாநாடு கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். … Read more

தமிழகத்தில் 1.37 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்- ராதாகிருஷ்ணன் தகவல்

திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது; தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் நடக்கிறது. திருச்சியில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்து நபரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செலுத்தி உள்ளனர். இந்த மருத்துவ குழுவினரை பாராட்டுகிறேன். தமிழகத்தில் … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: முத்தரசன்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார். 2011ஆம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.

காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோருக்கு மத்திய அரசு… உதவி! பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த ஆர்வலர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பயங்கரவாதிகளால் காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்டோர், ஜம்மு, டில்லி உட்பட நாட்டின் பிற பகுதிகளில் அகதிகள் போல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், தற்போதுள்ள பா.ஜ., அரசும் பல உதவிகளை செய்துள்ளன. ஆனால், அவர்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, பயங்கரவாத அச்சத்திலிருந்து விடுவித்தால் தான், காஷ்மீரில் அவர்களை மீண்டும் முழுமையாக குடியமர்த்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஜம்மு – காஷ்மீரில்1980களின் இறுதியில் பயங்கரவாதம் தலைதுாக்கியது. 1990களில், … Read more

ஜம்மு காஷ்மீர்: மசூதிக்குள் நாட்டுக்கெதிராக கோஷமிட்ட 13 பேர் கைது!

கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து மசூதிகள் மூடப்பட்ட இருந்தன. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள பெரிய மசூதியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுமக்கள் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆயிரகக்ணக்கானோர் இந்த தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொழுகை கூட்டத்தில் நாட்டுக்கெதிராக சிலர் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு சிறிது … Read more

ஸ்ரீநகர் என்ஐடியில் படித்த மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா உறுதி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்ஐடி) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஒருசில மாநிலங்களில் மட்டும் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பே கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்  ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி.யில் படிக்கும் 24 மாணவர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 24 பேருக்கு … Read more

சென்னையை துவம்சம் செய்து முதல் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்!

2022 ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.  மும்பையில் டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணியும் மற்றும் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 152 ரன்கள் இலக்கு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.  புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் இஷாந்த் கிஷன் 26 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டன் ரோகித் … Read more