“இலங்கை போன்ற சூழலை இந்தியா சந்திக்கும், காத்திருங்கள்..!" – ராகுல் காந்தி

மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த பின்பு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து நம் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது, வெறுப்பு பரப்பப்படுகிறது, நாடு பிளவுபடுகிறது என்று சரத் யாதவ் இன்று கூறினார். ஆம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். … Read more

ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை.. ஒருபோதும் அடங்காது! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

   உக்ரைன் ரயில் நிலையம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், ரஷ்ய கொடூரனுக்கு வரம்புகளே இல்லை என்பதை காட்டுகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெவித்துள்ளார். உக்ரைனின் Kramatorsk-ல் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், KramatorsK ரயில் நிலைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் இறக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் … Read more

இந்தியாவின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாகவே ஏறக்குறைய ஆயிரம் என்ற அளவிலே உள்ளது. தொற்று பரவல் குறைந்து வருவதால், பல மாநிலங்களில் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.  இந்த நிலையில், 5 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், கேரளா, மிசோரம், மராட்டியம், டெல்லி மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு … Read more

சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார். மேலும் திட்ட விளக்க பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை ஜிகேஎம் காலனியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை முதல்மைச்சர் திறந்து வைத்தார்.

சுட்டெரிக்கும் வெயில்.. எலுமிச்சை விலை 400 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்..!

இந்தியா முழுவதும் வெயில் மோசமாக இருக்கும் நிலையில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வேண்டும் என்பதற்காக இளநீர், நொங்கு, ஜூஸ் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் வாங்கி வரும் நிலையில் எலுமிச்சை-க்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கோடைக் காலத்திற்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சை விலை 200 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து 400 ரூபாய் வரைவில் உயர்ந்துள்ளது. … Read more

கட்டணக்கொள்ளை… பணச்சுருட்டல்… தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது போக்சோ – பூமராங் ஆகும் பாலியல் புகார்!

இது… போக்சோ சீஸன் எனும் அளவுக்கு, தொடர்ந்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் மீது பாலியல் வழக்குகள் பாய்ந்தவண்ணம் இருக்கின்றன. தமிழகம் முழுக்கவே வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டவர்களாக தினம் தினம் துடித்தபடி இருக்கின்றனர் மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பிவைக்கும் பெற்றோர். இதற்கு நடுவே, `பணத்தைச் சுருட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக, நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் திசைதிருப்புவதற்காக அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் மீதே பொய்யாக போக்சோ சட்டப்படி வழக்கு பாய்ச்சப்பட்டுள்ளது’ … Read more

பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!

 பிரபல ஐரோப்பிய நாடான போலந்துக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. போலந்து தூதரக மற்றும் துணைத்தூதரக ஊழியர்கள் 45 பேர் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷ்ய தூதர்களை போலந்து வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள போலந்து தூதரக ஊழியர்கள் ‘persona non grata’ என்று அறிவிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது. ‘persona non grata’ என்பது வெளியுறவுத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சட்ட சொல் ஆகும். இது ஒரு வெளிநாட்டு நபர் … Read more

மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள்: மத்தியஅரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெல்லி: மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, மற்றொரு புறம், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், உலக  நாடுகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சில … Read more

21 பந்தில் அரை சதம் அடித்த லிவிங்ஸ்டன் – குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணி களமிறங்கியது. பஞ்சாப் கேப்டன் வழங்கம் போல உடனே (5)பெவிலியன் திரும்பினார். அடுத்த புதிதாக பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோவ் களமிறங்கினார். அவரும் ஜொலிக்கவில்லை 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்ததாக தொடக்க ஆட்டக்காரர் தவான் உடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 35 ரன்கள் எடுத்த நிலையில் தவான் வெளியேறினார். ஒரு பக்கம் … Read more

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

சென்னை: காவல்துறையை விமர்சித்ததாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2014-ல் திண்டுக்கல்லில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் காவல்துறையை ஐ.பெரியசாமி விமர்சித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.