IPL 2022: `அவன் பேட்ட வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாகிடுச்சு!'- சலாம் கம்மின்ஸ் பாய்!

‘டேய்… அவன் எப்டி போட்டாலும் அடிக்கிறாண்டா’ என்ற வசனத்திற்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல்லின் ஒவ்வொரு சீசனிலுமே நம்பவே முடியாத ஒரு முரட்டுத்தனமான இன்னிங்ஸை எதோ ஒரு வீரர் ஆடிவிடுவார். இந்த சீசனின் தொடக்கத்திலேயே அப்படியொரு ஆட்டத்தை பேட் கம்மின்ஸ் ஆடியிருக்கிறார். மும்பைக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் 56 ரன்களை அடித்திருக்கிறார். இதில், ஹைலைட்டாக அமைந்தது டேனியல் சாம்ஸின் ஒரே ஓவரில் பேட் கம்மின்ஸ் அடித்த அந்த 35 ரன்கள்தான். பேட் கம்மின்ஸ் பேட் வீசிய வேகத்தில் … Read more

பள்ளி ஆசிரியை கணவருடன் சேர்ந்து கைது! சிறுமி கொடுத்த புகாரில் அதிர்ச்சி தகவல் அம்பலம்

கனடாவில் பள்ளி ஆசிரியை மற்றும் அவரின் கணவர் பாலியல் தாக்குதல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டாவாவை சேர்ந்த தம்பதி ஆண்ட்ரியா ஆண்ட்ரில் (37) மற்றும் ஹாரி ஆண்ட்ரில் (38). ஆண்ட்ரியா பள்ளிக்கூடம் ஒன்றில் 2017ல் இருந்து 2021 வரையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுமி மற்றும் சிறுவனிடம் ஆண்ட்ரியா மற்றும் ஹாரி தவறாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரையடுத்து இருவரையும் பொலிசார் … Read more

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – கேரள வழக்கறிஞரை வெளியேற நீதிபதிகள் உத்தரவு…

சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது. புதிய கட்டுவது தொடர்பாக பேச வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, எல்லைமீறி பேசிய கேரள வழக்கறிஞர் நெடும்பாரா என்பவரை நீதிமன்றத்தைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில், தமிழ்நாடு கேரளம் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவையும் கேரளா மதிப்பதில்லை. மேலும் தமிழக அரசுஅதிகாரிகள் அணையை ஆய்வு சென்றால், அவர்களையும் … Read more

தமிழகத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றின் இருப்பைக் கண்காணிப்பது, தேவைக்கேற்ப அவற்றை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவது, அவ்வாறு பெற முடியவில்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது ஆகியவை மாநில அரசின் இன்றியமையாத கடமையாகும். ஆனால், இந்த பொறுப்பை உணராமல், வெற்றி என்றால் அதற்கு தி.மு.க.தான் காரணம் என்றும், பிரச்சினை … Read more

159 சென்னை பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரூ.5.47 கோடி செலவில் 159 சென்னை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்க குறிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் அளித்தார்.     

விளாடிமிர் புதின் மகள்கள் மீது அமெரிக்கா தடை விதிக்க என்ன காரணம்..?!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் போர் குற்றங்களைக் கண்டிக்கும் விதமாக அமெரிக்கா புதிய தடை உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவில் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினின் இரண்டு மகள்களான மரியா புடினா (வொரொன்ட்சோவா) மற்றும் கேடரினா டிகோனோவா ஆகியோரைக் குறிவைத்து அமெரிக்கா தடை உத்தரவை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏதற்காக விளாடிமிர் புதினின் மகள்கள் மீது தடை உத்தரவை வெளியிட வேண்டும்…? … Read more

தூத்துக்குடி: சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். கொடியேற்றம் உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கயத்தாரைத் … Read more

பழிக்குப் பழி… ரஷ்ய வீரர்கள் எப்படி பொதுமக்களைக் கொன்றார்களோ அதே போல கொல்லும் உக்ரைன் வீரர்கள்

ரஷ்ய நகரம் ஒன்றில் அராஜகச் செயல்களில் ஈடுபட்ட ரஷ்யப் படைவீரர்கள் மக்களை எப்படி கைகளைப் பின்னால் கட்டி சுட்டுக் கொன்றார்களோ, அதேபோல தங்களிடம் சிக்கிய ரஷ்ய வீரர்களை கொன்று உக்ரைன் வீரர்கள் பழிக்குப் பழி வாங்குவதைக் காட்டும் பயங்கர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள் சிலர் சிக்கியபோது, அவர்கள் தங்களை புடின் பொய் சொல்லி ஏமாற்றி போருக்கு அனுப்பிவிட்டதாகக் கூறி கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளும், அவர்களுக்கு உக்ரைன் தாய்மார்கள் உணவும் … Read more

அதிமுகவில் உள்கட்சி தேர்தலுக்கான தேதிகள் வெளியீடு!

சென்னை: அதிமுகவில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து உள்ளனர். அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் பொறுப்புக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11 அன்றும், மூன்றாம் கட்டத் தேர்தல் … Read more

காஞ்சிபுரம் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ரூ.310.92 கோடி மதிப்பில் 9 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 6 ரெயில்வே பாலங்கள், ஆற்றுப்பாலம், பல்வழிச்சாலை மேம்பாலம் உள்பட மொத்தம் 9 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லையில் புதிய பாலங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. … Read more