மராட்டியத்தில் கட்டிடத்தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

மும்பை, மராட்டியத்தின் நான்டெட் நகரில் கட்டிடத்தொழிலாளியான சஞ்சய் பியானி என்பவர் தன் வீட்டு வாசலில் இருந்து வீட்டிற்குள் செல்லும் போது, பைக்கில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொலை சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  ​​தொப்பி அணிந்து கருப்பு உடை அணிந்த இருவர் கட்டிடத்தொழிலாளியை சரமாரியாக  சுட்டுக்கொலை செய்துள்ளனர்.  இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிய வராத  நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உக்ரைனில் சைக்கிளில் சென்றவரை…ரஷ்ய ராணுவத்தின் வெறிச்செயல்: அதிர்ச்சி காணொளி!

உக்ரைனின் புச்சா நகரில் சைக்கிளில் சென்றவர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போர் விதிமுறைகளை மீறி கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்து வருகிறது. இதையடுத்து உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டு தெரு வீதிகளில் கொல்லப்பட்டு கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், ரஷ்யாவின் இந்த … Read more

05/04/2022: தமிழ்நாட்டில் இன்று 24 பேருக்கு கொரோனா பாதிப்பு – சென்னையில் 11 பேருக்கு கொரோனா….

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதியாகி உள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், அனைத்து கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் ஒருசில மாதங்கள் முகக்கவசம் அணிவது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொரோனா உயிரிழப்பு இன்றி தொற்று பாதிப்பும் வெகுவாக … Read more

உயிரிழந்த வாலிபரின் உறுப்புகள் 6 பேரின் மறுவாழ்வுக்கு தானம்| Dinamalar

உடுப்பி, : சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உறுப்புகள், ஆறு பேருக்கு பொருத்தப்பட்டன.உடுப்பி பிரம்மாவரை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் சீனிவாஸ், 19. ஏப்ரல் இரண்டாம் தேதி, இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றிருந்தார்.உப்பினகோட்டே அருகே செல்லும் போது வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர், மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி மூளை சாவு ஏற்பட்டது. இதனால் சீனிவாசின் பெற்றோரிடம், உறுப்பு தானம் செய்வது குறித்து டாக்டர்கள் ஆலோசித்தனர்.இதற்கு பெற்றோரும் ஒப்புக் கொண்டனர். … Read more

புதன்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினம் – லட்சத்தீவு நிர்வாகம் அறிவிப்பு

கவரட்டி, லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு சைக்கிள் தினமாக அறிவிக்கப்படுகிறது என்று லட்சத்தீவு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சைக்கிள் தினம் நாளை(ஏப்ரல் 6) முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து லட்சத்தீவு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்ற 13-வது லட்சத்தீவு மாசுக் கட்டுப்பாட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லட்சத்தீவு நிர்வாகம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரசு ஊழியர்களுக்கான … Read more

RR vs RCB: ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி; இத்தனை வருடங்களாக ஆர்சிபி தேடிய ஃபினிஷரா தினேஷ் கார்த்திக்?

எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்கும் தறுவாயில் கிடைக்கும் வெற்றியைவிட மிகச்சிறந்த வெற்றி என்பது ஒன்றுமே இல்லை. ஐந்து விக்கெட்டுக்களை இழந்தபின்னர், எப்படியும் இன்று அவ்ளோதான் என பெங்களூரு ரசிகர்கள் ‘வலிக்கலியே’ மோடுக்குச் சென்ற போது, தினேஷ் கார்த்திக்கும், ஷபாஷ் அகமதும் ஆடிய ஆட்டம் அவர்களை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருக்கிறது. இருவரும் 30 நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டார்கள். சஞ்சு சாம்சன், ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி டாஸ் வென்ற டு ப்ளெஸ்ஸி சேஸிங் தேர்வு செய்தார். அணியில் … Read more

கருணாநிதி பிறந்தநாளன்று சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் “கலைஞர் எழுதுகோல் விருது”! தமிழகஅரசு

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3ந்தேதி அன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ரூ.5 லட்சம் பரிசு பணத்துடன் வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. திமுக பதவி ஏற்றதும் கடந்த 2021ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன், கலைஞர் எழுதுகோல் விருது, சமூக ஊடகப்பிரிவு, பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பல திட்டங்களை அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது, கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான … Read more

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் நீக்கம்: கோட்டாபய ராஜபக்ச புதிய அறிவிப்பு!

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டத்தை செய்வாய்க்கிழமை(ஏப்ரல் 5 திகதி) நள்ளிரவு முதல் திரும்பப்பெறுவதாக அந்தநாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு நெருக்கடியை அந்த நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ந்து கடுமையான உச்சத்தை தொட்டு வருவதால் இலங்கை அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி ஆளும் அரசுக்கு … Read more

கட்சியை கலைப்பேன்: குமாரசாமி அறிவிப்பு!| Dinamalar

பெங்களூரு : ”எனக்கு ஐந்து ஆண்டு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்தால் நீர்ப்பாசன திட்டங்களை முழுயாக நிறைவேற்றுவேன். கொடுத்த வாக்கை மீறினால் கட்சியை கலைப்பேன்,” என முன்னாள் முதல்வர்குமாரசாமி கூறினார்.பெங்களூரில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்றார்.அவர் கூறியதாவது:எனக்கு ஐந்து ஆண்டு முழுமையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். அப்போது அனைத்து நீர்பாசன திட்டங்களையும் செய்து முடிப்பேன்.அப்படி ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்றா விட்டால் கட்சியை கலைப்பேன். ஹனுமன் ஜெயந்தியன்று ‘ஜனதா … Read more

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்: பெங்களூரு அணி திரில் வெற்றி!

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்-கின் அதிரடியால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2022ம் ஆண்டுக்கான 13வது ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானம் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 169 … Read more