அரியலூர் மாணவி தற்கொலை விசாரணை; வழக்கு பதிந்தது சி.பி.ஐ!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அது தொடர்பான வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தடையில்லை என்று உத்தரவிட்டது. சி.பி.ஐ மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு மாணவியின் தந்தை 4 வாரங்களில் பதில் மனு அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, சி.பி.ஐ அதிகாரிகள் இந்த … Read more

பூஸ்டர் டோஸ் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு: அதிர்ச்சி தரும் தகவல்!

கொரோனாவை கட்டுப்படுத்த போடப்படும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனானது நான்கு மாதங்களில் குறைந்து விடுவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரிவந்துள்ளது. கொரோனாவானது டெல்டா, ஒமைக்ரான், ஏபி2 என உருமாறி கொண்டே இருந்து உலகநாடுகளை இன்னும் அச்சறுத்தி வருகிறது. இந்த கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதிற்காக உலக நாடுகள் முதல் தவணை இரண்டாம் தவணை என தங்கள் நாட்டு மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தின. இரண்டு தவணை தடுப்பூசி பெரும்பாலானோர் செலுத்திக்கொண்டு பின்னரும் … Read more

இலங்கை – இந்தியா கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது

புனே இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் கிரிக்கெட் போட்டியில்  கலந்துக் கொள்ள உள்ளது.   முன்பு இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது, பிப்ரவரி 25ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  டி20 போட்டியானது, வருகிற மார்ச் 13ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அட்டவணையில் மாற்றம் செய்து பிசிசிஐ வெளியிட்டுள்ளது.   இந்த மாற்றத்தின்படி,  3 போட்டிகள் … Read more

போர் பதற்றம்: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்கவேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உக்ரைன் போர் பதற்றம் மற்றும் அங்குள்ள இந்தியர்களை மீட்பது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா எந்த நிமிடமும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் இரு நாட்டு எல்லையில், குறிப்பாக உக்ரைனில் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கவலை அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இயற்கைக்கு மாறான உயிரிழப்பு என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீக்ரெட் சிங்காரம்| Dinamalar

நம்பூதிரியிடம் ஆரூடம் கேட்டவர்!குவாரி மாவட்டத்தில், அரசியல் களம் இப்பவே சூடு பிடிச்சிடுச்சின்னு சொல்லலாம். ஒரு பக்கம் ரெட்டி, மறு அரசியல் பிரவேசத்துக்காக போராட்டம் நடத்துறாரு. இன்னொரு பக்கம், கை கட்சில டிக்கெட்டுக்கான போராட்டம் சத்தமில்லாம நடக்குது.இப்போது, இங்கு அந்த கட்சி பலமா மாறிட்டு வர்றா மாதிரி இருக்கு. அதனால, அந்த கட்சில டிக்கெட்டுக்கான போட்டி அதிகமாயிடுச்சி. முன்னாள் மூத்த தலைவரோட மகன் ஒருவர், இந்த முறை டிக்கெட் தனக்கே கிடைக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கார். அதுக்காக, சில … Read more

10 நிமிடத்தில் ரூ.186 கோடி சம்பாதித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. எப்படி சாத்தியம்..!

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்கு சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருபவர். முதலீடு மட்டும் அல்ல பல கோடி லாபத்தினையும் சம்பாதித்தவர். பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வெற்றிகரமாக நடைபோட்டு வரும் ஜுன்ஜுன்வாலா, தனது போர்ட்போலியோவில் பல பங்குகளை வைத்துள்ளார். இன்று பங்கு சந்தை தொடக்கத்திலேயே தனது போர்ட்போலியோவில் உள்ள 2 பங்குகள் மூலம், சந்தை தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் 186 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியுள்ளார். ரூ.6 … Read more

ஹோண்டா சிட்டி, ஜாஸ் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது – Global NCAP

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற காரர்களுக்கு குளோபல் என்சிஏபி மையம் மூலம் Safer Cars For India திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட நிலையில் ஹோண்டா சிட்டி, ஜாஸ் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹோண்டா சிட்டி GNCAP சிட்டி காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 12.03 புள்ளிகளைப் பெற்றது.  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் 49 புள்ளிகளுக்கு 38.27 மதிப்பெண்களைப் சிறப்பாகச் செயல்பட்டது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர … Read more

கேரளா: மலை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு!

கேரள மாநிலம், பாலக்காடு பகுதிக்கு அருகிலுள்ள செராடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 7-ம் தேதி அங்குள்ள குறும்பச்சி மலைக்கு தன் நண்பர்கள் இரண்டு பேருடன் மலையேற்றம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கால் தவறி விழுந்த பாபு செங்குத்தான பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்த தகவல் அறிந்து கொச்சின் கப்பல் படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. பின்னர் … Read more

உக்ரைனுக்கு அருகே இருந்த படைகளை திரும்பப்பெறும் ரஷ்யா! வெளியான முக்கிய அறிவிப்பு

 உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சில படைகள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்ய பயங்கர ஆயுதங்கள் மற்றும் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, ரஷ்ய பாதுகாப்பு … Read more