நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; இம்மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19.02.2022 அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. … Read more