தலைப்பு செய்திகள்
பத்திரமாக இருங்கள்., கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில், கோவிட்-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனடாவில் உள்ள டிரக் ஓட்டுனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியர்களுக்கும் அந்நாட்டுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், ஒட்டாவாவில் இடம்பெற்று வரும் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியர்கள் “அதிக எச்சரிக்கையுடன்” இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், ‘எச்சரிக்கையுடன் இருக்குமாறு’ அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கனேடிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. கனடாவில் … Read more
கூடுதல் திரையரங்குகளில் ‘சாயம்’!
ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, … Read more
10, 12-ம் வகுப்புகளுக்கு இன்று தொடங்குகிறது திருப்புதல் தேர்வு
சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19-ல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3-ம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டது. இதன்படி, பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. … Read more
கொரோனாவுக்கு உலக அளவில் 5,780,757 பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,780,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 400,265,695 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 320,296,701 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,187 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான முன்பதிவு துவக்கம்| Dinamalar
சபரிமலை : சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு நேற்று துவங்கியது. மாசி மாத பூஜைகளுக்காக, பிப்., 12 மாலை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 13 முதல் 17 வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான முன்பதிவு, www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நேற்று மாலையே, பிப்., 13க்கான நான்கு ‘சிலாட்’ முன்பதிவு முடிந்து விட்டது.முன்பதிவு செய்த கூப்பனுடன், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் … Read more
ஹிஜாப் விவகாரம்; கர்நாடகா மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் … Read more
அதானி குழும பங்கினால் செம லாபம்.. முதல் நாளே அள்ளிக் கொடுத்த அதானி வில்மர்..!
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி, முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது. இந்த குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கு வெளியீட்டினை செய்தது. இந்த நிலையில் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. சமீப காலமாக பட்டியலிப்பட்ட சில பங்குகளில் சோமேட்டோ, தவிர மற்ற பங்குகள் பிரீமிய விலையில் பட்டியலிடப்பட்டது. 3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! இந்த நிலையில் … Read more
ஆழ்துளைக் கிணற்றால் 2 பிஞ்சு குழந்தைகள் பலியான சோகம்
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றின் சேற்றில் சிக்கி 2 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரம்பையில் சேறு நிறைந்த குழியில் விழுந்து சகோதரிகளான இரண்டு சிறுவர்கள் நேற்று (பிப்ரவரி 8) உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவர்கள், பெரம்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமு என்கிற சுரேஷ் மற்றும் இனித்தா ஆகியோரின் குழந்தைகள் லெவின் (5), ரோஹித் (3) என அடையாளம் காணப்பட்டனர். ராமுவின் வீட்டிற்கு … Read more
“அ.. ஆ…” : அரசியல்வாதிகளை செமையாக கிண்டலடிக்கும் ‘பப்ளிக்’ பட டீசர்!
கே.கே.ஆர். சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில், சமுத்திரகனி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் படம், பப்ளிக். ஏற்கெனவே படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. அதில் பல தலைவர்கள் படங்கள் இருக்க, சிலர் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் அரசியல்வாதியான ‘அழகன்’ தமிழ் மணி ஒரு அழகியுடன் (கோமல் சர்மா) அமர்ந்திருக்கிறார். அவர், “நம்ம கட்சி பேர சொல்றேன்.. திருப்பிச் சொல்லு பார்க்கலாம்..” என்று சொல்லி, … Read more