மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிந்தது

மும்பை, மராட்டியத்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 2-வது வாரத்தில் மாநிலத்தில் தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியது.  இதில் இன்று  பாதிப்பு அதிரடியாக சரிந்தது. மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 436 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 78 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75 லட்சத்து 57 ஆயிரத்து 34 … Read more

பழநி: போலீஸ் எஸ்.எஸ்.ஐ உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு; குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமா?!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சந்தானகிருஷ்ணன். இவர் பிப்ரவரி 6-ம் தேதி இரவு 11 மணியளவில் தாராபுரம் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களில் சிலர் சந்தானகிருஷ்ணனின் நண்பர் ஆனந்தனை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது அருகில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் தடுக்க முயன்றார். இதில் சந்தானகிருஷ்ணன் தலையில் பலத்த … Read more

இந்திய அணியில் இணைந்த 3 நட்சத்திர வீரர்கள்.. பிளேயிங் லெவனிலிருந்து ஓரங்கட்டப்படபோவது யார்..யார்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்காத இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நவ்தீப் சைனியும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று அகமதாபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் … Read more

பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கிய பின்னர் உச்ச நீதிமன்றம் வழக்குகளை ஆன்லைன் மூலமாகவே விசாரித்து வருகிறது. கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கடந்த சனிக்கிழமை இந்தியத் தலைமை நீதிபதி என்வி ரமணாவைக் கேட்டுக் கொண்டது. … Read more

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின. இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை … Read more

திமுக ஆட்சி அமைந்த 8 மாதத்தில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்; முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றி பெறுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். திமுக வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் மனு| Dinamalar

புதுடில்லி: தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 80 சதவீத மக்களுக்கு முதல் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விட்டது. கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தலாமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்னும் இரண்டாவது … Read more

நாணய கொள்கை குழு என்பது என்ன..? ஏன் இக்குழு மிகவும் முக்கியம்..!

இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தைப் பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை 8ஆம் தேதிக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது. சரி ரெப்போ விகிதம் உட்பட அனைத்து வட்டி விகிதத்தையும் நிர்ணயம் செய்வது யார்..?! விரைவில் வருகிறது ஜியோபுக்.. ஆகாஷ் அம்பானியின் புதிய திட்டம்..! இந்திய ரிசர்வ் வங்கி இந்திய … Read more

“ஒவைசி கூடுதல் பாதுகாப்பை ஏற்க மறுத்துவிட்டார்!" – நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம்

ஐந்து மாநில சட்டபேரவைத் தேர்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், கிதாரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பும் வழியில் அசாதுதீன் ஒவைசியின் காரை நோக்கி மர்ம நபர்கள் சுட்டதாகக் ஒரு தகவல் வெளியானது. அதனால், அவர் வந்த கார் பஞ்சர் ஆனதாகவும், அதன் பிறகு, தான் பாதுகாப்பாக மற்றொரு காரில் திரும்பியதாகவும் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். ஓவைசி இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் `இஸட்’ பிரிவு பாதுகாப்பு … Read more

எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? இந்த ஒரு மசாலா பொருளை தினமும் சேர்த்துக்கோங்க…!

 கருப்பு மிளகில் வைட்டமின் ஏ, கே, சி மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன.  கருப்பு மிளகில் பைபரின் உள்ளது, இது வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.   மேலும் இது வளர்சிதை மாற்ற செயல்முறையை விரைவுபடுத்தவும், கலோரிகளை விரைவாக எரித்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.  அந்தவகையில் உடல் எடையை குறைக்க இதனை எப்படி உணவில் சேர்த்து கொள்வது என பார்ப்போம்.  எடை இழப்புக்கு  … Read more