பழைய வாகனங்களுக்கான தடை: 2018 உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய டெல்லி அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்லியில் பழைய வாகனங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடை நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கும் என்பதால், இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டன. பிஎஸ்-6 தரச்சான்றிதழ் பெற்ற வாகனங்கள் பிஎஸ்-4 வாகனங்களை விட குறைவான காற்று மாசுவை வெளியிடுவதால், 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள். 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் … Read more

ஆந்திர டிஜிபி முன்னிலையில் 21 நக்சலைட்கள் சரண்

விஜயவாடா: ஆந்திர மாநில டிஜிபி ஹரீஷ்குமார் குப்தா முன்னிலையில் நேற்று 21 நக்சலைட்கள், ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர். ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதிகளில் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் சிஆர்பிஎப் மற்றும் அந்தந்த மாநில போலீஸார் இணைந்து கூட்டாக நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர், நக்சலைட்கள் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் சமீப காலமாக நக்சலைட்கள் பலர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் முக்கிய தலைவர்களும் … Read more

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: ஆதார் ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் ஏடிஆர் அமைப்பு மனு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆதார் ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏடிஆர் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் … Read more

வெறும் 50 ஆயுதங்களில் பாக். பணிந்தது: விமானப்படை துணைத் தளபதி தகவல்

புதுடெல்லி: ஏரோஸ்பேஸ் பவர் என்ற தலைப்பிலான கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய விமானப்படை துணைத் தளபதி நம்தேஸ்வர் திவாரி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஜெனரல் அனில் சவுகான் பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதால், நாம் ஆண்டு முழுவதும் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றார். விமானப்படை துணை தளபதி திவாரி பேசுகையில், “ஆபரேஷன் சிந்தூரில் நாம் செய்ததை விட சிறந்த உதாரணம் … Read more

பெங்களூரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை

பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, 184 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற‌னர். பெங்களூருவில் உள்ள மாகடி சாலையில் கன்னையா லால் (46) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் கடையை மூட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்த 3 பேர் கடைக்குள் புகுந்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி … Read more

'ஞான பாரத இயக்கம்' திட்டத்துக்கு வித்திட்ட தஞ்சை மணிமாறன்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: தமிழ் ஓலைச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பதன் விதிமுறைகள் கற்பித்து வரும் தஞ்சை மணிமாறனின் உத்வேகத்தால் உதித்ததுதான் ‘ஞான பாரத இயக்கம்’ திட்டம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி விவரிக்கும்போது, “பாரதத்தின் கலாச்சாரத்தின் மிகப் பெரிய ஆதாரம், நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும் தான். ஆனால் நமது கலாச்சாரத்தின் உயிர்ப்புத்தன்மையுடைய மேலும் ஒரு பக்கம் இருக்கிறது. நமது நிகழ்காலம் மற்றும் நமது … Read more

ஹரித்வார் மானசா தேவி கோயிலில் கடும் நெரிசல்: 6 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் மின்சாரம் தாக்கிதயதாக தகவல் பரவியதையடுத்து பக்தர்கள் அங்கிருந்து இறங்கிச் செல்ல முயற்சித்துள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ஓட முயற்சித்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து … Read more

கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் தொடக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக 31 மாவட்டங்களிலும் உண்டு உறைவிட பள்ளிகளை அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதால் அவர்களின் குழந்தைகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் மாவட்டம்தோறும் உண்டு உறைவிட பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கர்நாடக கட்டுமான தொழிலாளர் நல வாரியம், இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. இதனை ஏற்ற முதல்வர் சித்தராமையா, … Read more

துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தாலும் இவ்வளவு சலுகை உண்டா?

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தாலும், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் என்ற முறையில், அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஏராளமான வசதிகள் அரசின் சார்பில் செய்து கொடுக்கப்படும்.

வங்கதேசத்துக்குள் தள்ளப்படும் இந்தியர்கள்: மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி குற்றச்சாட்டு

புதுடெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: இந்திய குடிமக்கள் துப்பாக்கி முனையில் வங்கதேசத்துக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற கவலையளிக்க கூடிய தகவல்கள் வெளிவருகின்றன. வங்கமொழி பேசும் முஸ்லிம்களை போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்து செய்து வங்கதேசத்தினர் என குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் ஏழைகள், குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், துப்பரவு தொழிலாளர்கள், போலீஸாரின் அராஜகத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார். Source link