விஜயவாடா – ஹைதராபாத் சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 2 டிஎஸ்பிக்கள் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநில உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் டிஎஸ்பிக்கள் சக்ராதர் ராவ் (57), சாந்தாராவ் (54), ஏஎஸ்பி ராம் பிரசாத், கார் ஓட்டுநர் நரசிங்க ராவ் ஆகியோர் பணி நிமித்தம் காரணமாக விஜயவாடாவில் இருந்து காரில் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் யாதாத்ரி மாவட்டம், கைத்தாபூர் எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலையிலேயே … Read more

கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற 33 சதவீத மதிப்பெண்: பரிந்துரையை பரிசீலிக்கிறது அரசு

பெங்களூரு: கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சிக்கு 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்ற திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்வு மற்றும் மதிப்பீட்டு ஆணையம் இது தொடர்பான பரிந்துரையை மாநில கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது. அதில், “10-ம் வகுப்பில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்ணுக்கு பதிலாக 30 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம். மொத்த மதிப்பெண்ணில் 625-க்கு 33 சதவீதமான 206 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல … Read more

உத்தர பிரதேசத்தில் அடையாளத்தை மறைத்து பூசாரியாக பணியாற்றிய முஸ்லிம் கைது

புதுடெல்லி: மேற்கு உ.பி.யின் மீரட் மாவட்டம், தாத்ரி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இதன் பூசாரியாக கிருஷ்ணா என்ற பெயரில் இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வந்தார். கோயிலின் உள்ளேயே தங்கிவந்த அவரது நடவடிக்கையில் கிராமவாசிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இத்துடன், கோயில் உண்டியலில் பணம் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதார் அட்டையை வாங்கிப் பார்த்த பிறகு அவர் கிருஷ்ணா அல்ல காசீம் எனத் தெரியவந்ததது. பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட காசீம் கைது … Read more

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்க முதலில் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் வீட்டில் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க … Read more

நடப்பாண்டில் 12 ராக்கெட்களை செலுத்த திட்டம்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

திருச்சி: நடப்பாண்டு 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ, நாசா இணைந்து நிசார் சிந்தடிக் அப்ரசர் ரேடார் செயற்கைக்கோளை வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவ உள்ளன. இது ஜிஎஸ்எல்வி எஃப்-16 வரிசையில் 18-வது ராக்கெட்டாகும். இந்த செயற்கைக்கோள் நிலநடுக்ககம், புயல், பெருமழை உள்ளிட்ட பேரிடர்கள் குறித்த … Read more

ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

ஜலவாட்: ராஜஸ்​தானின் ஜலவாட் மாவட்​டம், பிப்​லோட் என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்பள்ளி​யில் நேற்று காலை 8.30 மணி​யள​வில் வகுப்​பறை​களுக்கு வந்த மாணவர்​கள், இறைவணக்க நிகழ்ச்​சிக்கு தயாராக இருந்தனர். அப்​போது பள்​ளிக் கட்​டிடத்​தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்​தது. இதில் சுமார் 40 மாணவர்​கள் இடி​பாடு​களில் சிக்​கிக் கொண்​டனர். பதறிப்​போன ஆசிரியர்​களும் கிராம மக்​களும் மீட்​புப் பணி​யில் இறங்​கினர். பின்​னர் அதி​காரி​களும், பேரிடர் மீட்​புக் குழு​வினரும் அங்கு விரைந்​தனர். இந்​நிலை​யில் இந்த … Read more

ஒடிசா வனத்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க பிஸ்கட் பறிமுதல்

புவனேஸ்வர்: ஒடிசாவின் ஜெய்பூர் வனத்துறை அலுவலகத்தில் துணை ரேஞ்சராக ராமா சந்திர நேபக் பணியாற்றி வருகிறார். அவரது மாத வருமானம் ரூ.76,880 ஆகும். ஆனால் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஒடிசா லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று ராமா சந்திர நேபக்குக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஜெய்பூர் நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல் … Read more

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு விடுவிப்பு: ஏர் இந்தியா

மும்பை: கடந்த மாதம் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் விடுத்துள்ளதாக தகவல். ஜூன் 12-ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம், மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த … Read more

பிரதமர் பதவியில் தொடர்ந்து 4,078 நாட்களை கடந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: தொடர்ந்து 4,078 நாட்​களாக பிரதமர் பதவி​யில் அமர்ந்​து, முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் சாதனையை பிரதமர் நரேந்​திர மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி பதவி​யேற்று நேற்​றுடன் (ஜூலை 25) 4,078 நாள்​களை நிறைவு செய்​துள்​ளார். இதன் மூலம், முன்​னாள் பிரதம​ரான மறைந்த இந்​திரா காந்​தி​யின் பதவிக்​கால​மான, தொடர்ச்​சி​யாக 4,077 நாள்​கள் நாட்​டின் பிரதம​ராகப் பதவி வகித்​திருந்த சாதனையை மோடி முறியடித்​துள்​ளார். 1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் … Read more

இந்து – முஸ்லிம் மத தலைவர்கள் பேச்சுவார்த்தை: ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: மதங்​களுக்கு இடையி​லான பதற்​றத்தை தணிப்​ப​தற்​கான பேச்​சு​வார்த்​தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்​எஸ்​எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்​லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் ஆர்​எஸ்​எஸ் பொதுச் செய​லா​ளர் தத்​தாத்​ரேயா ஹோசபல், சிறு​பான்மை பிரிவு தலை​வர் இந்​திரேஷ் குமார், இணை செய​லா​ளர்​கள் கிருஷ்ண கோபால் மற்​றும் ராம்​லால் உள்​ளிட்​டோர் இடம்​பெற்​றனர். முஸ்​லிம்​கள் தரப்​பில் அகில … Read more