இந்து – முஸ்லிம் மத தலைவர்கள் பேச்சுவார்த்தை: ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: மதங்​களுக்கு இடையி​லான பதற்​றத்தை தணிப்​ப​தற்​கான பேச்​சு​வார்த்​தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்​எஸ்​எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்​லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் ஆர்​எஸ்​எஸ் பொதுச் செய​லா​ளர் தத்​தாத்​ரேயா ஹோசபல், சிறு​பான்மை பிரிவு தலை​வர் இந்​திரேஷ் குமார், இணை செய​லா​ளர்​கள் கிருஷ்ண கோபால் மற்​றும் ராம்​லால் உள்​ளிட்​டோர் இடம்​பெற்​றனர். முஸ்​லிம்​கள் தரப்​பில் அகில … Read more

“இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு

பாட்னா: பிஹார் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓர் அரசை ஆதரிப்பது வருத்தமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “குற்றங்கள் அதிகரித்து வரும் ஓர் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக உள்ளது. பிஹாரில் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசு நிர்வாகம் குற்றவாளிகளுக்கு … Read more

Gpay, Phonepe பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம்? ரிசர்வ் வங்கி தகவல்!

UPI சேவை கட்டணம் வசூலிக்கும் வகையில் மாற்றப்படலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இது கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் ஆன்லைனில் ஹோமம் டிக்கெட்டுகள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்​லைனில் ஸ்ரீநி​வாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் டிக்​கெட்​கள் வழங்​கப்​படும் என திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. திருப்​பதி அலிபிரி நடை​பாதை தொடக்​கத்​தில் கோசாலை அருகே பெரு​மாள் கோயில் உள்​ளது. இங்கு தின​மும் ஸ்ரீநி​வாச திவ்ய அனுக்ரஹ ஹோமம் நடை​பெறுகிறது. இதற்​காக 150 ஆன்​லைன் டிக்​கெட்​களும், நேரில் 50 டிக்​கெட்களும் பக்​தர்​களுக்கு வழங்​கப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆன்​லைனிலேயே தின​மும் 200 ஹோமம் டிக்​கெட்​டு​கள் வழங்​கப்​படும் … Read more

திருமணத்துக்கு முன் HIV பரிசோதனை? கட்டாயமாக்க மாநில அரசு திட்டம்!

கோவாவை தொடர்ந்து மேகாலயாவில் HIV நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திருமணத்துக்கு முன் HIV பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை கொண்டு வர அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

மோடியின் கனிவால் நெகிழ்ந்த மொழிபெயர்ப்பாளர்

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரும் நிருபர்களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது கெய்ர் ஸ்டார்​மர் ஆங்​கிலத்​தி​லும், பிரதமர் நரேந்​திர மோடி இந்​தி​யிலும் பேசினர். பிரதமர் மோடி​யின் இந்தி உரையை ஒரு மொழி பெயர்ப்​பாளர் ஆங்​கிலத்​தில் மொழிபெயர்த்​தார். இதே​போல பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரின் ஆங்​கில உரையை மற்​றொரு மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்து கூறி​னார். தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து ஸ்டார்​மர் பேசும்​போது இரு​நாடு​களுக்​கும் பெரு​மள​வில் முதலீடு​கள் குவி​யும் என்று குறிப்​பிட்​டார். … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகை! யார் யாருக்கு கிடைக்கும்?

நிக்ஷய் போஷன் யோஜனா, காசநோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய திட்டம். நோயாளிகள் இதை பயன்படுத்தி, தங்கள் சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்கலாம்.

பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு

பாட்னா: பிஹாரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மாதத்துக்கு ரூ.9,000 அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதனால் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியமும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “‘பிஹார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின்’ கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 க்கு பதிலாக ரூ.15,000 வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை … Read more

‘ஸ்குவிட் கேம்’ ஸ்டைலில் சாலையிலுள்ள மோசமான நிலையை எதிர்த்து ‘ஸ்கிட் கேம்’ போராட்டம் நடத்திய பெங்களூரு பத்திரிகையாளர்கள்!!!

Squid Game Style Protest: பெங்களூருவில் சாலைகள் மற்றும் நடையறைகள் சீரழிந்து இருப்பதை எதிர்த்து, ஜனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இணைந்து ஜூலை 24ஆம் தேதி புதுமையான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். பிரபல கொரியா தொடரான ‘ஸ்குவிட் கேம்’ (Squid Game) சார்ந்த ஆடைகள் அணிந்து, அவர்கள் நடத்திய இந்த “Skid Game” போராட்டம் தற்போது இணையத்தில் தீவிரமாக வைரலாகி வருகிறது.  

கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் … Read more