கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி!

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும், உயிரோடு இருக்கும் கார்கில் … Read more

ஒடிசா அரசு ஹாஸ்டல்களில் சிறுமிகள் கர்ப்பம்: மருத்துவ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Two minor girls found pregnant: ஒடிசா மாநிலம் கன்டமால் மாவட்டத்தில் உள்ள அரசு ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் 10ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள், கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை

புதுடெல்லி: பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது. மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் இதுதொடர்​பாக எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக சென்னை ஐசிஎப்​-ல் ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்​ரஜன் ரயில் இன்​ஜின் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் … Read more

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும் மேற்பட்டோர் தங்​கள் இருப்​பிடங்​களை விட்டு வெளி​யேறும் சூழல் ஏற்​பட்​டது. கலவரத்தை கட்​டுப்​படுத்த முடி​யாத நிலை​யில் மணிப்​பூர் முதல்​வர் என்​.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்​வ​தாக அறிவித்​தார். இதையடுத்​து, கடந்த பிப்​ர​வரி 13 முதல் மணிப்​பூரில் குடியரசுத் … Read more

மாநிலங்களவை எம்.பி.யாக வில்சன், கமல், சிவலிங்கம், சல்மா பதவியேற்பு: தமிழில் உறுதி ஏற்றனர்

புதுடெல்லி: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகிய 4 பேரும் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் தமிழில் பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுக-வின் சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவையில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. … Read more

அனைத்து கட்சி கூட்டத்தில் உடன்பாடு: மக்களவையில் ஜூலை 28 முதல் இயல்புநிலை திரும்பும்

புதுடெல்லி: மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி ஜூலை 28 முதல் மக்களவை வழக்கம்போல செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-வது நாளாக நேற்றும் இரு அவைகளும் முடங்கின. இதை தொடர்ந்து, மக்களவை தலைவர் ஓம் பிர்லா … Read more

ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ

புதுடெல்லி: ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் யுஎல்பிஜிஎம் – வி3 என்ற ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இந்த ஏவுகணை தயாரிப்பு அதானி மற்றும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வகை ஏவுகணையில் வி1, வி2, வி3 என்ற மூன்று வகை ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் வழிகாட்டுதல், செயல்பாடு, தாக்கும் தூரம் ஆகிய விஷயங்களில் மாறுபாடுகள் உள்ளன. இவற்றில் யுஎல்பிஜிஎம் – வி3 ஏவுகணை பெங்களூரில் கடந்த பிப்ரவரி … Read more

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் ஆக. 1-ம் தேதி முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர்

புதுடெல்லி: பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டம் (பிஎம்-விபிஆர்ஓய்) என்ற பெயரில் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. இத்திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த … Read more

கேரள சிறையில் இருந்து தப்பிய ‘ஒற்றைக் கை’ ஆயுள் தண்டனை குற்றவாளியை மீண்டும் கைது செய்த போலீஸார்

கண்ணூர்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோரனூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சவும்யா (23). இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷோரனூருக்கு பயணிகள் ரயிலில் சென்றுள்ளார். அந்த ரயில் பெட்டியில் சவும்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சவும்யா பயணித்த ரயில் பெட்டியில் ஏறிய தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி (வயது 30) என்பவர் ஏறியுள்ளார். இவருக்கு ஒரு … Read more

கேமிங் செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம்? – தீவிரவாதிகளின் ரகசிய நடவடிக்கை

ஸ்ரீநகர்: பப்ஜி மாதிரியான ஆன்லைன் வார் கேமிங் செயலிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கேமிங் செயலிகள் தான் இப்போது தீவிரவாதிகளுக்கு தகவல் தொடர்பு சார்ந்து முக்கியமானதாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் ரகசியமாக நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாத குழுக்கள் தகவல் தொடர்புக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வழக்கமான வழிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்பிக்கும் … Read more