ரூ.17,500-க்கு முகத்தில் மசாஜ் செய்துகொண்ட மும்பை பெண்ணுக்கு சருமப் பிரச்சினை – போலீஸில் புகார்

மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் 17,500 ரூபாய் செலவு செய்து தனது முகத்துக்கு ஃபேஷியல் மசாஜ் செய்து கொண்டுள்ளார். ஆனால், அதன் பிறகு அவரது தோலில் காயம் (Skin burn) ஏற்பட்டுள்ளது. அதோடு, அது நிரந்தரமாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண், காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அழகு நிலையத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். போலீஸாரும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள காமதேனு … Read more

கேரளாவில் தாலி கட்டும் போது தடுத்த போலீஸ்..சினிமா பாணியில் நடந்த சம்பவம்! முழு விவரம்!

கேரளாவில் காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள இருந்த போது போலீஸார் வந்து தடுத்துள்ளனர். பின்னர் என்ன நடந்தது?  

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவப் படைகளை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் உள்ளாட்சித் தேர்தலின்போது மத்திய துணைராணுவப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்துவது என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளது. மேலும் “தேர்தல் நடத்துவது வன்முறைக்கான உரிமையாக இருக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலின்போது மத்திய துணை ராணுவப்படையினை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசும், தேர்தல் ஆணையமும் … Read more

RBI Appointment: ஆர்.பி.ஐ துணை கவர்னரானார் தமிழர் சுவாமிநாதன் ஜானகிராமன்!

RBI Deputy Governor Swaminathan Janakiraman: இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக எஸ்பிஐ எம்டி சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார்

உலகளவில் 300-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடைய 20 மருந்துகள் பட்டியல்.. இந்தியாவிலிருந்து 7 தயாரிப்புகள் இடம்பிடித்துள்ளதாக தகவல்

உலகளவில் 300-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடைய 20 மருந்துகள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 7 தயாரிப்புகள் இடம்பிடித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தான், காம்பியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட இறப்புகளுடன் தொடர்புபடுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சில இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தற்போது எச்சரிக்கப்பட்டுள்ள 7 இந்திய தயாரிப்புகளில் இருமல் மருந்து, வைட்டமின் டானிக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, நொய்டாவின் மரியான் பயோடெக், … Read more

உலகில் தனக்கான சரியான இடத்தை நோக்கி இந்தியா நகர்கிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: மிக உயர்ந்த தகுதியுடன் இருக்கும் இந்தியா, உலகில் தனக்கான சரியான இடம் எதுவோ, அதை நோக்கி நகர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு முன்பு ‘தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியது: “அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையே முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதையும் விட வலுவாகவும் ஆழமாகவும் இருக்கிறது. உலகில் தனக்கான இடம் எதுவோ அதை … Read more

“டெல்லியில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள்… முற்றிலும் பொறுப்பே இல்லை” – ஆளுநருக்கு முதல்வர் கேஜ்ரிவால் கடிதம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அம்மாநில துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லி மக்களின் பாதுகாப்பு, அதுகுறித்த நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு உரிய பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளன. இதுபோன்ற தீவிர குற்றச் … Read more

Manslaughter: மகளை முதலைக்கு உணவாக்கிய அப்பா! ஜாதிவெறியில் ஆணவக்கொலை செய்த தந்தை

Honor Killing Crime: கேட்போரை நடுங்க வைத்த ஆணவக் கொலை! மகளையும், அவர் காதலித்த இளைஞரையும் கொலை செய்து முதலைகளுக்கு உணவு கொடுத்த தந்தையின் ஜாதி வெறி

மணிப்பூர் வன்முறை | ராணுவத்தை அனுப்பக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநில குகி பழங்குடியினரை பாதுகாக்க ராணுவத்தை அனுப்பக்கோரும் மனுவினை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள மணிப்பூர் பழங்குடினர் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சல்வ்ஸ், “உச்ச … Read more

உ.பி. கோரக்பூர் கீதா பதிப்பகத்துக்கு 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு

புதுடெல்லி: கடந்த 1995-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சர்வதேச காந்தி அமைதி விருது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 கோடி ரொக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை அடங்கிய இந்த விருது, அகிம்சை உள்ளிட்ட காந்திய வழியில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா … Read more