கர்நாடகா தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் – ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: ‘‘கர்நாடகா தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அளித்த அனைத்து வாக்குறுதிகளும், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும்’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அன்பால் வெற்றி பெற்றுள்ளது. எனது தேசிய நடை பயணத்திலேயே இந்த அன்பு கோஷம் ஒலித்தன. கர்நாடகாவில் வெறுப்பு கடைகள் … Read more

கேரளா கடற்கரையில் ₹12,000 கோடி மதிப்புள்ள போதை மருந்தை பறிமுதல் செய்த NCB!

சுமார் 12,000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள  Crystal Meth அல்லது மெதாம்ஃபெடமைன் (Methamphetamine) எனும், சட்டென மனிதனை அடிமையாக்கும் மோசமான போதை மருந்தை, கேரளா வழியே இந்தியாவுக்குள் கொண்டுவர முயற்சித்த பாகிஸ்தான் நபர் கைது.  

இந்தியா முழுவதும் தொலைந்து போன மொபைல் போனை மீட்க புதிய அமைப்பை ஏற்படுத்தியது மத்திய அரசு

தொலைந்த மொபைல் போனை விரைவாக கண்டுபிடிக்கவும், அதன் செயல்பாட்டை முடக்கி வைக்கவும் இந்தியா முழுமைக்குமான ஒரு கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. மத்திய உபகரணங்கள் அடையாள பதிவு என்ற CEIR அமைப்பு தற்போது டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் நடைமுறையில் உள்ள நிலையில் வரும் 17ம் தேதி முதல் மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் கண்டிப்பாக IMEI என்ற 15 இலக்க தனித்துவ எண் … Read more

கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? – இன்று மாலை கூடுகிறது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று மாலை கூடுகிறது. இதில் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. பாஜக 65 தொகுதிகளிலும், … Read more

என்ன கொடுமை இது.. கேரளாவை போலவே ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து.. 10-க்கும் மேற்பட்டோர் மாயம்

விசாகப்பட்டினம்: கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கோர சம்பவத்தை போல, ஆந்திராவிலும் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உற்சாக மிகுதியாலும், சிலரின் பேராசையாலும் ஆங்காங்கே விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், … Read more

3 நாட்களுக்கு கடும் கோடை வெயில் சுட்டெரிக்கும் என வானிலை எச்சரிக்கை..!

ஆந்திராவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . கடும் வெப்ப அலை எழலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சனிக்கிழமை நாந்தியாலா மாவட்டத்தில் உள்ள கோஸ்படு பகுதியில் அதிகபட்ச வெப்பமாக 42 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் பதிவானது. கோடை வெப்பத்தின் பாதிப்புகளை சமாளிக்க அதிகாரிகளுக்கு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.கடும் கோடைக்கு நடுவே சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. எனவே … Read more

கர்நாடகாவில் தோல்வியை தழுவிய தமிழ் வேட்பாள‌ர்கள்

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், ஷிமோகா, பத்ராவதி, சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட இடங்களில் 60 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஆனால் அங்குள்ள காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை என தமிழ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மேயர் சம்பத் ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் தேர்தலில் வாய்ப்பு கேட்டனர். அதில் ஆனந்த்குமாருக்கு பெங்களூருவில் உள்ள சி.வி.ராமன் நகரில் (தனி) போட்டியிட … Read more

மண்ணை கவ்விய சி.டி. ரவி.. சிஷ்யனை வைத்தே குருவை வீழ்த்திய காங்கிரஸ்.. மாஸ்டர் ப்ளான்!

பெங்களூர்: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. அதேபோல, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.டி. ரவியும் மண்ணை கவ்வியுள்ளார். சி.டி. ரவியின் கோட்டையை அவரது சிஷ்யனை வைத்தே காங்கிரஸ் தகர்த்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கர்நாடகா பாஜகவில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகிய தலைவர்களின் வரிசையில் இருப்பவர் சி.டி. ரவி. கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கு பரிசீலிக்கப்பட்ட தலைவர்களின் லிஸ்ட்டில் முக்கிய இடத்திலும் சி.டி. ரவி இருந்தார். கர்நாடகா பாஜகவில் … Read more

கர்நாடகாவை கைப்பற்றியது காங்கிரஸ் – சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; மஜத அதிர்ச்சி தோல்வி

பெங்களூரு: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 65, மஜத 19 இடங்களை மட்டுமே பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. பாஜக 224, காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயசங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, … Read more